11
June, 2026

A News 365Times Venture

11
Thursday
June, 2026

A News 365Times Venture

PMK : `மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது; எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை!’ – ஜி.கே மணி வேதனை

Date:

பாமக-வில் தற்போது உச்சக்கட்ட உட்கட்சி மோதல் நடந்து வருகிறது. புதுச்சேரி அருகே நடைபெற்ற கட்சி கூட்டத்தில் மேடையிலே அன்புமணி, ராமதாஸ் இடையே வாக்குவாதம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவரும், அவரின் மகனுமான அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதனிடையே இன்று சென்னையில் அன்புமணி தனியாக ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

அன்புமணி – ராமதாஸ்

இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த ஜி.கே மணி, “நீங்கள் கேள்வி கேட்கின்றீர்கள். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை… மன உளைச்சலாகவும், நெருக்கடியான சூழலில் இருக்கின்றேன்.

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு பலமான கட்சி, தனித்தன்மையோடு இருக்கக்கூடிய கட்சி. கொள்கையுடனும் லட்சியத்துடன் இருக்கக்கூடிய கட்சி நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்றது. ரொம்ப வேதனை படுகிறோம், கஷ்டப்படுகிறோம் நான் எதுவும் சொல்லக்கூடாது என்று நினைத்தேன் நீங்கள் கேள்வி கேட்கின்றீர்கள்.

ஒரு நெருக்கடியான சூழல் கட்சியில் உள்ளது!

நீங்க சொல்லி ஆக வேண்டும் என்று கேட்பதினால் சொல்ல வேண்டிய சூழல் உள்ளது. இல்லை என்றால் நான் ஓடி இருப்பேன். ஓடினாலும் `சொல்லாத ஓடினான்’ என்று அது ஒரு செய்தியாக வருகிறது. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

ஒரு நெருக்கடியான சூழல் கட்சியில் உள்ளது. இந்த நெருக்கடியை பார்த்தால் ரொம்ப கஷ்டமாகவும் வேதனையாகவும் உள்ளது. இது மறுபடியும் சீராக வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.

ஜி.கே. மணி

மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என நினைக்கின்றோம். குடும்ப பாசத்தோடு இருக்கக்கூடிய கட்சி. வலிமையான கட்சியாக பலமான கட்சியா மீண்டும் வரணும்.

பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி. தேர்தல் வருகின்ற நேரத்தில் வலிமையாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். இதற்காக தான் ஐயாவை சந்திப்பதற்காக வந்திருக்கிறோம். அதிகமாக கேள்வி கேட்டு பதில் சொல்லும் மனநிலையில் நான் இல்லை.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பிரசவ டாக்டர் இல்லை; தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!' – உலுக்கும் Spot Report!

`எங்க குழந்தை இந்த உலகத்தை பார்க்குறதுக்கு முன்னாடியே கொன்னுட்டாங்களே....ஏழைங்க உசுருன்னா இவங்களுக்கு...

விழுப்புரம்: மீனவப் பெண்கள் தூக்கு மாட்டும் போராட்டம்; போலிசாருடன் மோதல் | Photo Album

“கடல் பசுவுக்காக மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கலாமா?” - கொதிக்கும் மீனவர்கள்! Source...

ம.பி: பாஜக-வுக்குச் சாதகமாக மாறிய களம்? – காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி?

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின்...