18
May, 2026

A News 365Times Venture

18
Monday
May, 2026

A News 365Times Venture

PM SHRI திட்டம்: “தமிழ்நாடு அரசு, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவா?" – அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

Date:

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்தது. தற்போது தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு வலியுறுத்தி, தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த சில தினங்களிலேயே தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாக அர்த்தமாகும் என்பதால், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

PM Shri

மேற்கு வங்க தேர்தல் முடிவில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு தேசியக் கல்விக்கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பதால், இந்த அரசு என்ன முடிவுகளை முன்வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு கூடுதல் கவனம் பெற்றது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை என்பது எங்கள் அரசின் கொள்கைகளில் அடிப்படையானது. நம்முடைய இரு மொழிக்கொள்கையில் அவரவரின் தாய்மொழி மிக முக்கியம்.

உறவுகளிடம் பேச தாய் மொழியும், உலகிடம் பேசுவதற்கு ஆங்கிலமும் போதும். அடுத்தடுத்தக் கூட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கிறோம். இருமொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். நம் பள்ளிக் கல்வித்துறைக்கென ஓர் இலக்கு இருக்கிறது. அதன்படி என்னென்னவெல்லாம் இந்த துறைக்கு வழங்கமுடியுமோ… அத்தனையையும் சிறப்பாக ஆலோசனைகளுக்குப் பிறகு செய்வோம் ” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“எங்களுக்கும் பேச தெரியும்; அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்..!" – மாணிக்கம் தாக்கூர்

திருச்செந்தூர் தொகுதி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா...

மதுரை : 'ஆதார் அட்டையைக் காண்பித்து மது வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்' – காரணம் என்ன?

தமிழ்நாட்டில் கோயில்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீ சுற்றளவில் உள்ள...

'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' – நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே,...

“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” – தோனியின் `Last' என்ட்ரியை  காண வரும் முதல்வர் விஜய்?

சேப்பாகத்தில்  இன்று நடைபெறும் சென்னை  சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு...