24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

Pakistan: "தோட்டாவிற்குத் தோட்டா எனப் பதில் அளிக்க வேண்டுமா?" – பாகிஸ்தானிடம் மோடி கேள்வி

Date:

பிரதமர் மோடி குஜராத்திற்குச் சென்றிருக்கிறார். பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அவர் முதன்முதலாகத் தனது சொந்த மாநிலத்திற்குச் சென்றிருக்கின்றார்.

அங்கே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, “ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தியது.

இந்தியாவிலிருந்து தீவிரவாதம் என்னும் முள்ளை அகற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம். தீவிரவாதம் என்பது பிராக்ஸி போர் அல்ல… அது உங்களுடைய (பாகிஸ்தான்) தந்திரம். அப்படி நீங்கள் எங்கள் மீது போர் தொடுக்கிறீர்கள்.

பாகிஸ்தான் கொடி

75 ஆண்டுகளாகச் சுற்றுலாப் பயணிகள், ஆன்மீக சுற்றுலாப் பயணிகள், மக்கள் என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ, அங்கெல்லாம் நீங்கள் தாக்குதல் நடத்தினீர்கள். இதை நாங்கள் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டுமா?

அதற்குப் பதில், தோட்டாவிற்குத் தோட்டா என நாங்கள் பதில் அளிக்க வேண்டுமா?

இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், எங்களைத் தாக்கிக் கொண்டே இருக்கும்போது திரும்பத் தாக்க யோசிக்கமாட்டோம். எங்களுடையதும் போர் வீரர்களின் பூமிதான் என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறோம்.

நான் இங்கு இரண்டு நாட்களாக இருக்கிறேன். அனைத்து இடங்களில் காவிக் கடல் கொக்கரிப்பது போல உணர்கிறேன். மூவர்ணக் கொடியும், தாய் நாட்டின் மீது அதீத அன்பும் அனைத்து உள்ளங்களில் தெரிகிறது.

தீவிரவாதம் உங்களுக்கு என்ன நன்மையைத் தந்தது? இதைப் பாகிஸ்தான் மக்களிடம் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தானைத் தீவிரவாதம் என்னும் நோயிலிருந்து விடுவியுங்கள். அமைதியான வாழ்க்கை வாழுங்கள், நன்கு உண்ணுங்கள் அல்லது என்னுடைய தோட்டாக்கள் உள்ளன” என்று கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நாங்கள் ஆதரவு தரவில்லை என்றால் விஜய்யின் பதவியேற்பு விழாவே நடத்திருக்காது" – பெ.சண்முகம் கடும் தாக்கு | Live Updates

விஜய்-க்கு பெ.சண்முகம் பதிலடிநேற்று (ஜூன் 23, 2026) தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர்...

"வில்லங்க சான்றிதழில் நில அளவை எண், கதவு எண் வழங்க வேண்டும்"- பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் குமார் துகார் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற...

அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடிப் புகார்: யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி! – என்ன நடக்கிறது?

அயோத்தி கோயில் விவகாரம்உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ...