1
May, 2026

A News 365Times Venture

1
Friday
May, 2026

A News 365Times Venture

OPS : 'அமித் ஷா எங்களை அழைக்காதது வருத்தமே!' – மனம் திறந்த ஓ.பி.எஸ்

Date:

‘ஓபிஎஸ் பத்திரிகையாளர் சந்திப்பு!’

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு ஓ.பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ‘அமித்ஷா சென்னை வந்தபோது எங்களை அழைத்து பேசாதது வருத்தமே.’ என மனம் திறந்து பேசியிருக்கிறார்.

OPS

‘NDA வில்தான் தொடர்கிறோம்!’

ஓ.பி.எஸ் பேசியதாவது, ‘நாங்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துதான் சந்தித்தோம். இப்போதும் அதே கூட்டணியிலேயே நீடிக்கிறோம். யார் விரும்புகிறார்களோ இல்லையோ எங்களின் நிலைப்பாடு இதுதான். மாவட்டக் கழக நிர்வாகிகளை ஆலோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

அடுத்ததாக மாவட்டம் மாவட்டமாக தொண்டர்களை சந்திக்க உள்ளோம். மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது எங்களை அழைக்காதது வருத்தமே. அதிமுகவை ஜெயலலிதா உச்சாணிக் கொம்பில் வைத்துவிட்டு சென்றார். இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என தெரியும். ஆகவே பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு

OPS
OPS

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் 9 கட்சிகளும் இணைந்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். எடப்பாடியை தவிர NDA வில் இருக்கும் அத்தனை தலைவர்களும் என்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். விஜய் கட்சி ஆரம்பித்தபோதே நான் வாழ்த்தினேன். அவரின் அரசியலைப் பொறுத்தே அவர் எந்தத் திசையில் செல்கிறார் என சொல்ல முடியும். இதுவரை நல்ல திசையிலேயே செல்கிறார். அரசு நிர்வாகத்தில் திமுக தோல்வி அடைந்துவிட்டது.’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"இதுதான் நீங்கள் செலுத்தும் தேர்தல் பில்; அடுத்து பெட்ரோல், டீசல்" – கேஸ் விலை உயர்வு பற்றி ராகுல்

இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993...

`ஒரே அடியாக…' – ரூ.993 உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை!

அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து வரும்...

'மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது' – வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள்...

திக் திக்… மூடில் திமுக தலைமை… ''என்னதான் ஆச்சு?!"

“தேர்தல் களம் என்றால் தி.மு.க-வினரை போல சுற்றி சுழன்று பணியாற்றுபவர்கள் இருக்க...