28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

'இஸ்லாம் மதத்திற்கு மாறினால் பிற்படுத்தபட்ட வகுப்பு சான்றிதழ் கிடையாது’ – நீதிமன்றம் சொல்வது என்ன?

Date:

தூத்துக்குடியைச் சேர்ந்த சமீர் அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “என் இயற்பெயர் பரமசிவம். நான் இந்துப் பெற்றோருக்குப் பிறந்து, இஸ்லாம் மதத்தைத் தழுவி என்னுடைய பெயரையும் மாற்றிவிட்டேன். இதற்கு கயத்தாறு சுன்னத் ஜமாத் அமைப்பு 2015ல் சான்று வழங்கியது.

இது குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியானது. இஸ்லாமிய சடங்குகள் மற்றும் வழக்கப்படி வஹிதாவைத் திருமணம் செய்தேன். எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ‘முஸ்லிம் லெப்பை’ பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்குரிய சாதி சான்று கேட்டு, கயத்தாறு தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன்.

அவர் அதை நிராகரித்து விட்டார். எனவே எனக்கு சாதி சான்று வழங்க மாவட்ட ஆட்சியருக்கும், தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்த உத்தரவில், “பரமசிவம், ‘சமீர் அகமது’ என்று தன் அடையாளத்தை மாற்றிக்கொள்வது, இந்திய அரசியலமைப்பு பிரிவின் கீழ், ஒரு தனிநபர் தன் அடிப்படை உரிமை.

அவ்வாறு மதம் மாறிய பின்னர், இட ஒதுக்கீட்டு சலுகைகளைத் தொடர்ந்து கோரும்போது, அதன் நியாயம் மற்றும் சட்டப்பூர்வ தன்மை குறித்த மற்றொரு விவாதத்திற்கு அது வழிவகுக்கிறது.

‘ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதும் அவர் ஒரு முஸ்லிமாகிறார். அவர் மதம் மாறுவதற்கு முன்பு சார்ந்திருந்த சமுகத்தின் அடிப்படையில், இஸ்லாமிய சமுதாயத்தில் அவரது நிலையைத் தீர்மானிக்க முடியாது. இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறுபவர்கள், மதம் மாறினால் அந்தச் சலுகையைப் பெற முடியாது என்ற சூழல் இருந்ததால், இஸ்லாம் மதத்திற்கு மாறுவதைத் தடுக்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

இதனால் தமிழக பிற்படுத்தபட்டோர் ஆணையம் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 9 இல் ஒரு அரசாணையை வெளியிட்டது. ‘தாவூதி, போஹ்ராக்கள் போன்ற சில பிரிவினர் சமூக மற்றும் கல்வி ரீதியாக முன்னேறிய நிலையில் உள்ளனர். அன்சார், தக்காணி முஸ்லிம்கள், துபேகுலா, லப்பைகள், மாப்பிளா, ஷேக், சையது ஆகிய ஏழு முஸ்லிம் உட்பிரிவினர் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்புகள், சீர்மரபினர் அல்லது பட்டியல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் யாரேனும் புதிதாக இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்கள் இந்த ஏழு வகுப்புகளுக்குள் வந்தால் அவர்களுக்கு ‘பிற்படுத்தபட்ட வகுப்பு முஸ்லிம்’ எனச் சான்றிதழ் வழங்கி, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய ஆணையம் பரிந்துரைத்தது” என்றனர்.

அப்போது பேசிய அரசு வழக்கறிஞர், “இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்கள் ஏதேனும் ஒரு வடிவில் தொடர்ந்து இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே, மாநில அரசு இத்தகைய முறையை மேற்கொண்டுள்ளது.

முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், இஸ்லாத்திற்கு மாறினால், அவருக்கு, ‘பிற்படுத்தபட்டவகுப்பு முஸ்லிம்’ என்ற அந்தஸ்து கிடைக்காது. ஏற்கனவே இட ஒதுக்கீட்டு பலனைப் பெற்று வந்தவர்கள் மட்டுமே, இஸ்லாத்திற்கு மாறினால் அப்பலனை இழக்க மாட்டார்கள். மதம் மாறியவரை ஏழு பிரிவுகளில் ஒன்றில் ஏற்றுக்கொள்வது, சம்பந்தப்பட்ட ஜமாத்தின் பொறுப்பு.

சாதி சான்றிதழ்

ஜமாத் சான்று வழங்கிய பின், வருவாய்த்துறை அதிகாரிகள் அதைக் கேள்விக்குள்ளாக்க முடியாது. நீதிமன்றமும் அதை மறுஆய்வு செய்வது நியாயமாக இருக்காது. அரசாணையை ரத்து செய்யக்கூடாது” என்றார்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “மதம், இனம், சாதி, பிரிவு, பிறந்த இடம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை, நம் அரசியலமைப்பு தடை செய்திருந்தாலும், சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய பிரிவினர் அல்லது பட்டியல் சமூகம், பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு.

மதத்தின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு இட ஒதுக்கீட்டு சலுகையை வழங்க முடியாது என்பதால், பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்குப் பட்டியலிட்டதுடன், அரசு பின்தங்கிய வகுப்பினருக்கான ஒரு பட்டியலையும் தனியாக வகுத்துள்ளது.

பிற்படுத்தபட்ட வகுப்பு முஸ்லீம்கள் என்கிற அந்த நிலைப்பாடு அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதே கேள்வி. சாதி அமைப்பைத் தங்களுடைய அம்சமாகக் கொண்ட இந்து மதத்தைப் போலன்றி, தங்களின் மதங்கள் சமூக சமத்துவத்தை வழங்குகின்றன எனக் கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய மதங்கள் பல நூற்றாண்டுகளாகப் பிரசாரம் செய்து வந்துள்ளனர்.

சில பிரிவினரைப் பிற்படுத்தபட்டவர்கள், மற்றவர்களை முன்னேறியவர்கள் என வகைப்படுத்துவது, குர்ஆனின் போதனைகளுக்கு முரணானது. இஸ்லாம், சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

வரலாற்று சூழல் காரணமாக, இஸ்லாமிய சமூகமும், பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது. இவை, இந்து மதத்திலுள்ள ஜாதி அமைப்பிற்கு இணையானவை என்று கூட சொல்லலாம்.

ஜாதி எவ்வாறு பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறதோ, அதுபோலவே ஒருவர் பிறப்பாலேயே ராவுத்தர், மரைக்காயர் அல்லது தக்காணி முஸ்லிமாக அறியப்படுகிறார். ஒருவரை, ‘ராவுத்தர் முஸ்லிமாக’ மதமாற்றம் செய்ய முடியும் என்று கூறுவது அபத்தமானது.

75 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ‘ இஸ்லாத்திற்கு மதம் மாறியவுடன், ஒருவர் முஸ்லிம் ஆகிறார்’ எனத் தீர்ப்பளித்துள்ளது

உயர் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு நடைமுறையில் இருக்கும்போது, வெறும் அரசாணையை வெளியிடுவதன் மூலம் அதனை மாற்றியமைக்க முடியாது. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு எதிராக, நிர்வாக துறையால் ஒருபோதும் செயல்பட முடியாது. ஆனால், மாநில அரசு அதைச் செய்துள்ளது.

அத்தீர்ப்பின் சாரத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், ஒரு அரசாணையை மாநில அரசு பிறப்பிக்க அதிகாரம் பெற்றதல்ல. பிற்படுத்தபட்ட வகுப்பு முஸ்லிம்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஏழு முஸ்லிம் உட்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றிற்கு மதமாற்றம் செய்ய முடியும் என அங்கீகரிக்கும் வகையில் அரசாணையை வெளியிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

இது அரசியலமைப்பிற்கு மட்டுமல்லாமல், இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் முரணான புதிய நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. அந்த அரசாணை சட்டவிரோதமானது. சாதி சான்று நிராகரித்த உத்தரவு நிலைநிறுத்தப்படுகிறது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், பிற்படுத்தபட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் என்ற அந்தஸ்தைக் கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. தமிழக பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது”  என்று கூறி அரசாணையை ரத்து செய்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இந்தியா – வங்கதேசம் உறவில் விரிசலா? மோங்லா துறைமுக பொருளாதார மண்டலத்தைக் கைப்பற்றிய சீனா

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பயன்படுத்தி, அந்நாட்டில்...

மகாராஷ்டிரா TET வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து; "இளைஞர்களின் எதிர்காலத்தையே திருடும் செயல்"- ராகுல்

மகாராஷ்டிராவில் இன்று (ஜூன் 28) நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TET),...

பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர்? – செங்கோட்டையன் பேசியது என்ன?

நேற்று (ஜூன் 26, 2026) கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு வருவாய்த்...