25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

Operation Sindoor: `என் மகள நினைச்சு பெருமைப்படுறேன்..!' – நெகிழும் சோபியா குரேஷிவின் தந்தை

Date:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக  ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. 

நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளைக் கொண்டு 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங்,

இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங், என இரண்டு பெண் அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

இது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இவர்கள் இருவரும்   ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு தலைமை வகித்திருக்கிறார்கள். இந்நிலையில் கர்னல் சோபியா குரேஷி குறித்து அவரது அம்மாவும், அப்பாவும் பேட்டி அளித்திருக்கின்றனர்.

பெருமையாக இருக்கிறது!

சோபியா குரேஷி குறித்து பேசிய அவருடைய அம்மா, “ நாட்டிற்காக எங்களது மகள் செய்த செயல் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த செயல், மற்றவர்களும்  தங்களது மகள்களை நாட்டிற்கு சேவை ஆற்ற வைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மகள் நாட்டிற்காக இதைச் செய்திருக்கிறார் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

சோபியா குரேஷி மற்றும் அவரது அம்மா
சோபியா குரேஷி மற்றும் அவரது அம்மா

சிறுவயதில் இருந்தேன் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான்  சோபியா குரேஷியின் ஆசை” என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சோபியா குரேஷி குறித்து பேசிய அவரது அப்பா, “நாங்கள் நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் இருக்கிறோம். என் மகளை நினைத்து பெருமைக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.  

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"'மந்திரி சபையிலும் இடம், திமுகவிலும் தொடர்கிறோம்' எனச் சிலர் சொல்வது எனக்கு புரியவில்லை" – வைகோ

மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடந்த மதிமுக...

பிரமாண்ட ஸ்வர்ணகிரி; `ஆந்திராவின் KGF' – சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தில் உள்ள ஜொன்னகிரி...

PMK: இணைந்த தந்தை – மகன் இதயங்கள்! – இக்கட்டில் சேலம் அருள் போன்ற 2-ம் கட்ட தலைவர்கள்?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி...