20
April, 2025

A News 365Times Venture

20
Sunday
April, 2025

A News 365Times Venture

NTK: "தமிழ்த்தேசியத்திற்கு எதிரான பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள்" – சீமான் மீது தமிழரசன் காட்டம்

Date:

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தமிழரசன் வெளியிட்டுள்ள கடிதத்தில், “32 ஆண்டு காலமாகத் தமிழ்த் தேசிய அரசியலுக்கான பயணத்திலிருந்தபோதும் கட்சித் தொடங்கிய நாட்களிலிருந்து 15 ஆண்டுகளாக தற்போது வரை, கட்சிக்கான களங்களில், மக்களுக்கான தளங்களில், இணைந்து பணியாற்றியதை எண்ணி மகிழ்கிறேன். சமீப காலமாக உங்கள் பேச்சும் செயலும் நமது தமிழ்த்தேசிய கருத்துகளுக்கு முரணாக இருக்கின்றன.

சீமான்

எதைச் சொல்லுவது? மதவாத அரசியலை எதிர்ப்பதாகக் கூறுகின்ற தாங்கள், பா.ஜ.க மனிதக் குலத்தின் எதிரி என்று சொல்லிவிட்டு, தற்போது அந்த அமைப்பில் இருக்கிற எச்.ராஜாவைப் பேரறிஞர் என்று சொல்வதையா? தமிழிசை ‘சீமான் எங்கள் தீம் பார்ட்னர்’ என்று கூறியதை நீங்கள் மறுக்காததையா!?

திருமாவளவனை அண்ணன் என்று கூறிக்கொண்டே நாம் தமிழர் கட்சி மேடையில், மாற்று இயக்கத்தினர் மேடை நாகரிகம் இன்றி விமர்சிக்கும் போதும் கேலி பேசும் போதும், தாங்கள் கைதட்டிச் சிரித்து மகிழ்வதையா?

தவெக விஜய் – பரந்தூர்

நடிகர் விஜய் கட்சி தொடங்குகிற போது தம்பியென்று சொன்னதையும், அவரே என்னை எதிர்த்தாலும் நான் அவரை எதிர்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, நடுரோட்டில் நின்றால் லாரி அடித்துச் செத்துவிடுவாய் என்று பேசியதையா? தம்பி அப்துல் ரவூப் நினைவு நாளில் என்னை யாராவது ‘சங்கி’ என்றால் செருப்பால் அடிப்பேன் என்று செருப்பைக் காட்டிவிட்டு, நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்த பிறகு, ‘சங்கி என்றால் சக தோழன்’ என்று சொல்வதையா? இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை எப்படி ஏற்பது?

மாற்றுக் கட்சியில் இருப்பவர்களைத்தான் இப்படிப் பேசுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எங்கள் குலதெய்வம் நங்கை காளியம்மாள் என்று கூறிய நீங்கள், ‘பிசிறு’ என்று பேசியதையும், தலைவருக்கு நிகராக நாங்கள் மதித்து வந்த பொட்டு அம்மான் அவர்களை இழிவாகப் பேசி வந்த குரல் பதிவையும், இன்றளவிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமிழரசன், சீமான்

இப்படி இன்னும் எத்தனையோ..! இந்தச் சூழலில் கட்சியின் தத்துவங்களை மேடைகளில் பேசி வந்த தாங்கள், தமிழ்த்தேசியத்திற்கு எதிரான, ஒரு பிழையான தத்துவங்களை நோக்கிப் பயணப்படும் பா.ஜ.க-விடம் எங்களை விற்றுவிடுவீர்கள் என்றே தோன்றுகிறது. அதே வேளையில் மேடையில் உங்களுக்கு முன்னால், சாதிப் பெருமை பேசுகிறவர்களை, இப்படிப் பேசாதே என்று கண்டிக்காமல், சிறிதும் பொறுப்புணர்வற்று கைகொட்டிச் சிரித்து, சாதி வெறியைத் தூண்டுவதை ஆமோதிக்கின்றீர்கள். தமிழ்த் தேசிய விடுதலையில் சாதி ஒழிப்பு அவசியம் எனும் போது, மேற்கண்ட தங்களின் செயல்கள், மன வேதனையைத் தருகிறது.

தேசியத் தலைவர் பிரபாகரனின் தத்துவங்களையும், கட்சியின் கொள்கைகளையும், கட்சியில் உள்ள அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி, நீங்கள் சொல்வதே கொள்கை, நீங்கள் பேசுவதே தத்துவம் என்றும், பிரபாகரனிசத்தைச் சிதைத்து, சீமானிசத்தை விதைத்து. கட்சியை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்கிறீர்கள்” என்று சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" – அனுபவம் பகிரும் மல்லை சத்யா

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக மக்கள்...

மதிமுக: "மல்லை சத்யா மட்டும் தலைவர் வைகோவுக்கு சேனாதிபதி இல்லை" – வெடிக்கும் துரை வைகோ

ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.,யும் வைகோவின் மகனுமான...

Stalin: "திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?" – கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில்,...

'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' – நயினார் நாகேந்திரன்

கோவை காளப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு...