21
April, 2026

A News 365Times Venture

21
Tuesday
April, 2026

A News 365Times Venture

NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes

Date:

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு, தேர்தல் ஆணையம் நோட்டாவை அறிமுகப்படுத்தியது.

நோட்டா

இதற்கு முன்பு, ஒரு வாக்காளர் தனது வாக்கை யாருக்கும் அளிக்க விரும்பவில்லை என்றால் ’49-O’ என்ற விதியின் கீழ் தேர்தல் அதிகாரியிடம் படிவம் பெற்றுப் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் இந்த நடைமுறை வாக்காளரின் தனியுரிமையைப் பாதிக்கிறது என அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ’49-O’ பிரிவு வாக்களிப்பின் ரகசியத்தை மீறுவதாகக் கூறி ரத்துசெய்தது.

அதோடு நோட்டா என்கிற தேர்வை அனைத்து வாக்குச்சீட்டு மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டது. அப்போது இருந்துதான் நோட்டா அமலில் இருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்தியாவிலேயே முதன்முதலாக 2013-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்தான் நோட்டா பயன்பாட்டிற்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நோட்டா அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது.

வாக்கு
வாக்கு

அதேபோல தற்போதைய விதிகளின்படி ஒரு தொகுதியில் நோட்டா முதல் இடத்தைப் பிடித்தாலும், அதற்கு அடுத்தபடியாக எந்த வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளாரோ, அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உங்கள் குரல்..!

Source link

தொகுதி மக்கள் வழங்கும் அமோக ஆதரவு; வெற்றிபெறப் போகும் மண்ணச்சநல்லூர் 'செல்லப்பிள்ளை' கதிரவன்!

மண்ணச்சநல்லூர் தொகுதியின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் தி.மு.க வேட்பாளர் கதிரவன், வெற்றிக்கனியை...

`பினாமிகளை வைத்துத் தமிழகத்தை ஆள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்!' – குளச்சலில் கடுகடுத்த ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும்...

“இப்போதே எம்.எல்.ஏ-வாக ஏற்றுக்கொண்டு மனு கொடுக்கிறார்கள் மக்கள்”- தி.மு.க அரூர் வேட்பாளர் அ.சண்முகம்

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கி இருப்பவர் அ.சண்முகம்....