மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் நீலம் ஷிண்டே. இவர் அமெரிக்காவில் முதுகலை படிப்பு படித்து வருகிறார்.
கடந்த 14-ம் தேதி இவருக்கு அமெரிக்காவில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. விபத்தினால் இவருக்கு மார்பு மற்றும் தலை பகுதிகளில் எலும்பு முறிவு மற்றும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
இவர் கடைசியாக 12-ம் தேதி தனது குடும்பத்திடம் பேசியுள்ளார். அதன் பின்னர், பிப்ரவரி 16-ம் தேதி விபத்து நடந்த இரு நாள்களுக்குப் பிறகு தான் நீலமின் குடும்பத்தாருக்கு விபத்து பற்றி தெரிய வந்துள்ளது.
உடனடியாக, அவர்கள் அமெரிக்கா விசாவிற்கு முயற்சித்தப்போது அவர்களுக்கு நேர்காணலுக்கான ஸ்லாட் அடுத்த ஆண்டிற்குத்தான் கிடைத்துள்ளது. இதனால், நீலமின் குடும்பமானது அரசு மற்றும் மீடியாவின் உதவியை நாடியது.
நேற்று மகாராஷ்டிரா எம்.பி சுப்ரியா சுலே இந்தச் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது அந்தக் குடும்பத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் பலனாக அமெரிக்கத் தூதரகம் இந்தக் குடும்பத்திற்கு விசா வழங்கியுள்ளது. தற்போது நீலமின் தந்தை உள்ளிட்ட மூன்று பேர் அமெரிக்காவிற்குச் செல்ல இருக்கின்றனர்.
மருத்துவமனையின் பில், போக்குவரத்து செலவு என அரசு எதாவது நிதி உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று நீலமின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலமிற்கு ஏற்பட்ட விபத்திற்குக் காரணமான ஓட்டுநரைக் கடந்த 19-ம் தேதி அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளனர்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel