20
April, 2025

A News 365Times Venture

20
Sunday
April, 2025

A News 365Times Venture

NEP: "நீங்கள் வந்து வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை" – மத்திய அரசைச் சாடிய முதல்வர்

Date:

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ரூ.1,476 கோடி மதிப்பீட்டிலான 602 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்ததுடன், ரூ.386.92 கோடி மதிப்பீட்டில் 44,689 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவுக்கான முன்மாதிரி அரசு நம்முடைய அரசு. மாநிலம் வளர்ந்தால் ஒன்றிய அரசு மகிழ்ச்சிதான் அடைய வேண்டும். மாநில வளர்ச்சியில் நாடுதான் வளம் பெறும். ஆனால் இன்றைக்கு ஒன்றியத்தை ஆளுகின்ற அரசு மாநிலத்தின் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்படும் அரசாக இருக்கிறது.

ரோடு ஷோவில் மக்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

மாநில வளர்ச்சியைத் தடுக்கும் அரசாக இருக்கிறது. ஜி.எஸ்.டி மூலமாக நமது மாநில நிதி வளத்தை மொத்தமாகக் கபளீகரம் செய்தார்கள். மாநிலத்துக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். மாநிலங்களுக்குப் புதிய திட்டங்களை அறிவிக்க மறுக்கிறார்கள். மத்திய, மாநில அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கான நிதியைத் தர மறுக்கிறார்கள். அவற்றைத் தடுப்பதற்குப் புதிய தடைகள், சட்டங்கள் உருவாக்குகிறார்கள். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாணவர்கள் படித்து முன்னேறுவதைத் தடுக்க பார்க்கிறார்கள். படிக்கக் கூடாது, வேலைக்குப் போகக்கூடாது என 100 ஆண்டுகளுக்கு முன் நம் மக்கள் ஒதுக்கப்பட்டனர். அந்த சமூக நீதியைச் சிதைக்கத்தான் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது.

இந்த தேசிய கல்விக் கொள்கையினால் பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினரின் முன்னேற்றம் தடுக்கப்படும். ஏராளமான திட்டங்களை உருவாக்கி தமிழக மக்களின் வளர்ச்சி, மாநில வளர்ச்சியைத் தடுக்க பார்க்கின்றனர். தமிழர்களின் முன்னேற்றத்திற்காக, மாணவர்களின் கல்வி மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை விடுவியுங்கள் என, நேற்றைய தினம் இந்திய நாட்டின் பிரதமருக்குத் தமிழக முதல்வர் என்ற முறையில் நான் கடிதம் எழுதினேன். அதற்கு இன்றைக்கு ஒன்றிய கல்வியமைச்சராக இருக்கக் கூடிய தர்மேந்திர பிரதான், `கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்’ எனப் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். நான் கேட்கிறேன் கல்வியில் அரசியல் செய்வது நீங்களா… நாங்களா…?

முதல்வர் ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்வித்துறைக்குத் தரவேண்டிய நிதியைத் தருவோம் என பிளாக்மெயில் செய்வது அரசியல் இல்லையா ? கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிப்பது அரசியல் இல்லையா ? பலமொழிகள் கொண்ட இந்திய நாட்டை ஒருமொழி கொண்ட நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா ? பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழக்கூடிய நாட்டை ஒற்றையின நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா ? ஒரு திட்டத்துக்கான நிதியை இன்னொரு திட்டத்துக்காக மாற்ற நிர்ப்பந்திப்பது அரசியல் இல்லையா ? நீங்கள் செய்வது அரசியலா அல்லது நாங்கள் செய்வது அரசியலா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மக்கள் திட்டங்களுக்காக அரசின் நிதியைச் செலவு செய்கிறவர்கள் நாங்கள்.

மதவெறிக்காகவும், இந்தி திணிப்புக்காகவும் செலவு செய்யக் கூடியவர்கள் நீங்கள். தர்மேந்திர பிரதான் அவர்களே தமிழகத்திலிருந்து எங்களிடம் நீங்கள் வாங்கும் வரியைத் தர முடியாது என்று கூற ஒருநொடி போதும் என்பதை மறந்து விடாதீர்கள். கொடுத்துப் பெறுதல்தான் கூட்டாட்சித் தத்துவம். அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை. அதைக்கூடப் புரிந்து கொள்ளாதவர்கள் இந்தியாவை ஆள்வதுதான் மிகப்பெரிய சாபக்கேடு. தேசிய கல்விக் கொள்கை கல்வியை வளர்க்கக் கொண்டுவரப்பட வில்லை. அது இந்தியை வளர்க்கக் கொண்டு வரப்பட்டுள்ளது. நேரடியாக வந்தால் தடுப்பார்கள் எனக் கல்விக் கொள்கை வழியாகத் திணிக்கக் கொண்டு வரப்பட்டுள்ளது.

நலத்திட்டங்கள் வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

தேசிய கல்விக் கொள்கை தாய் மொழியை வளர்ப்பதாக என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். நீங்கள் வந்துதான் வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை. தமிழ் மொழியை வளர்க்க எங்களுக்குத் தெரியும். இதை நான் எச்சரிக்கையாகக் கூறுகிறேன். தேன் கூட்டில் கல் எறியாதீர்கள். நான் இருக்கும் வரை, தி.மு.க இருக்கும் வரை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை தமிழுக்கும், தமிழனுக்கும் எதிரான எந்த செயல்பாடும் இந்த மண்ணுக்குள் வர முடியாது. உங்களால் எதுவும் செய்ய முடியாது. இதுபோன்ற தடைகள் எங்களுக்குப் புதிது இல்லை. எந்தப் பக்கம் தடை வந்தாலும் அதை உடைப்போம். எங்கள் வெற்றிப் பயணம் தொடரும்” என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" – அனுபவம் பகிரும் மல்லை சத்யா

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக மக்கள்...

மதிமுக: "மல்லை சத்யா மட்டும் தலைவர் வைகோவுக்கு சேனாதிபதி இல்லை" – வெடிக்கும் துரை வைகோ

ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.,யும் வைகோவின் மகனுமான...

Stalin: "திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?" – கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில்,...

'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' – நயினார் நாகேந்திரன்

கோவை காளப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு...