29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

Mock Drills: `நாடு தழுவிய அவசரகால பாதுகாப்பு ஒத்திகை' – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

Date:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தானிடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. இரண்டு நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டுவந்த நிலையில், இரு நாடுகளுக்கு மத்தியில் இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட சில இணக்கமான ஒப்பந்தங்களை முறித்துக்கொள்வதாக இரண்டு நாடுகளும் அறிவித்தன.

ஜம்மு காஷ்மீர் பகல்ஹம்

இரண்டு நாடுகளின் தூதரக அதிகாரிகளும் திரும்பப் பெறப்பட்டனர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்த அறிக்கையில், “நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த வேண்டும்.

போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்புவது, பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது, சைரன் ஒலியின்போது மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அமித் ஷா

மேலும், போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும். குறிப்பாக போரில் காயமடைந்தவர்களை மீட்பது, எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். இரவில் அகல்விளக்கு ஒளியில் அன்றாட பணிகளை மேற்கொள்வது குறித்தும், குறிப்பாக அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிப்போர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்.

பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் பாதுகாப்பாக தங்கியிருப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

ஜம்மு – கஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒருமாதக் காலத்துக்கு தேவையான மளிகைப் பொருள்களுடன் ஏற்கெனவே பதுங்கு குழிகளுக்கு சென்றுவிட்டார்கள் என்றும், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் எல்லையோர கிராமங்களிலும் போர்க்கால ஒத்திகை தொடங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி' – முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்!

போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகார்...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவருக்கு `மரண தண்டனை'- 60 நாள்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

புனே அருகில் உள்ள நஸ்ராபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் ஒன்றாம்...

`மக்களாகிய நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல்.!' – அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதென்ன?

முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் சம...

`தொண்டை சரியில்ல' – ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும்...