22
June, 2026

A News 365Times Venture

22
Monday
June, 2026

A News 365Times Venture

Keir Starmer: “பதவியை விட்டு விலகுகிறேன்; ஆனால்.."- நா தழுதழுக்கப் பேசிய இங்கிலாந்து பிரதமர் கெய்ர்

Date:

பிரிட்டனில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த 2024 ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் வெற்றியை ஸ்டார்மர் பெற்றுத் தந்தார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அவரது நிர்வாகத்தின் மீதான அதிருப்தி காரணமாக, அவரது தனிப்பட்ட செல்வாக்கும் தொழிலாளர் கட்சியின் செல்வாக்கும் பொதுமக்களிடையே கடுமையாகச் சரிந்து வந்தன.

இதனால் அரசாங்கத்தின் நலிவடைந்து வரும் நிலையை மீட்டெடுக்க புதிய தலைவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே அழுத்தங்கள் அதிகரித்தன.

கெய்ர் ஸ்டார்மர்

அவருக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், கடந்த வாரம் நடைபெற்ற சிறப்புத் தேர்தலில் கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றிக்குப் பிறகு, தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவிக்காக ஸ்டார்மருக்கு எதிராகப் போட்டியிடப் போவதாக பர்ன்ஹாம் பகிரங்கமாகச் சவால் விடுத்தார். இந்த அரசியல் நகர்வுகளால் கடந்த வார இறுதியில் ஸ்டார்மருக்குக் கடுமையான அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

தலைமைப் பதவிக்கான போட்டியில் பர்ன்ஹாமின் கை ஓங்கியதைத் தொடர்ந்தே, கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியைத் துறக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஸ்டார்மரின் இந்த அதிரடி விலகலின் மூலம், பிரிட்டன் அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தங்களது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்கூட்டியே பதவியை விட்டு விலகும் ஆறாவது பிரதமர் என்ற வரிசையில் இணைந்திருக்கிறார்.

கெய்ர் ஸ்டார்மர்
கெய்ர் ஸ்டார்மர்

தன் ராஜினாமா குறித்து டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கெய்ர் ஸ்டார்மர், “புதிய தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிக பிரதமராகப் பதவியில் நீடிப்பேன்” என்று கூறினார்.

இந்த அறிவிப்பை வெளியிடும்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். ஒருகட்டத்தில் அவரது குரல் தழுதழுத்தது. தொடர்ந்து பேசிய அவர், “ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். இன்னும் சில வாரங்களில் பிரதமர் பொறுப்பில் இருந்து முழுமையாக வெளியேறுவேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கூட்டுறவு வங்கி: விவசாயிகளின் ரூ.5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து...

சபரீசன் என்ட்ரி; கேக் வெட்ட மறுத்த முதல்வர்; MLA குழந்தைக்கு பெயர் சூட்டு விழா – சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் நடந்து முடிந்திருக்கிறது. இன்று நடந்த சில...

"அமைச்சர் ராஜ்மோகனுக்கு மிரட்டல்" – பத்திரிகையாளர் மன்ற நிகழ்ச்சியைப் புறக்கணித்தாரா ராஜ்மோகன்?

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ் மோகன் கலந்து கொள்ளாமல்...

பிரிட்டன்: 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் – உலகை ஆண்ட நாட்டின் தற்போதைய நிலை என்ன?

ஒரு காலத்தில் சூரியன் மறையாத பேரரசு எனக் கூறப்பட்ட பிரிட்டிஷ் அரசு,...