28
August, 2026

A News 365Times Venture

28
Friday
August, 2026

A News 365Times Venture

India – Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா – பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

Date:

இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.

இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்…

  • ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிரதேசங்களில் எந்தத் தாக்குதல்களையும் முன்னெடுக்கவில்லை. ஆனால், நேற்று பாகிஸ்தான் இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகிலுள்ள பகுதிகளில் தாக்குதலைத் தொடங்கியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தப் பகுதிகளில் தற்போது மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது பாகிஸ்தான்.

  • நேற்று இரவு ஜம்மு பகுதியில் 8 ஏவுகணைகளைப் பாகிஸ்தான் ஏவியது. ஆனால், அந்த 8 ஏவுகணைகளையும் இந்தியாவின் ராணுவம் அதன் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் தகர்த்தெறிந்தது.

பாகிஸ்தான் கொடி
  • ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் பகுதிகளில் உள்ள இந்தியாவின் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது பாகிஸ்தான். அவை அனைத்தும் தடுக்கப்பட்டுவிட்டன என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • பாகிஸ்தானுக்கு தக்க பதிலடிகளை ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் மூலம் தந்து வருகிறது இந்தியா.

  • தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்தியாவின் கடற்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

  • இந்தியாவில் உள்ள ஜம்மு, பதான்கோட், ஸ்ரீநகர் உள்ளிட்ட 24 முக்கிய விமான நிலையங்களை மூடியுள்ளது இந்தியா. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • பாகிஸ்தானுக்கு உதவ துருக்கி தனது சரக்கு விமானத்தைப் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.

  • இந்தியாவின் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட் ஆகிய இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • பாகிஸ்தான் விமானம் ஒன்று இந்தியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  • இதுவரை இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்… நிதி ஆயோக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, நம் இளைய தலைமுறை...

நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" – ஜக்கி வாசுதேவ்

நேற்று நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டு, அதில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளதாகத்...

"தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்; முதலமைச்சர் விளக்கம் வேண்டும்!" – பெ.சண்முகம் கடிதம்

இடதுசாரி அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும்...