1
July, 2026

A News 365Times Venture

1
Wednesday
July, 2026

A News 365Times Venture

India – Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா – பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

Date:

இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.

இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்…

  • ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிரதேசங்களில் எந்தத் தாக்குதல்களையும் முன்னெடுக்கவில்லை. ஆனால், நேற்று பாகிஸ்தான் இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகிலுள்ள பகுதிகளில் தாக்குதலைத் தொடங்கியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தப் பகுதிகளில் தற்போது மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது பாகிஸ்தான்.

  • நேற்று இரவு ஜம்மு பகுதியில் 8 ஏவுகணைகளைப் பாகிஸ்தான் ஏவியது. ஆனால், அந்த 8 ஏவுகணைகளையும் இந்தியாவின் ராணுவம் அதன் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் தகர்த்தெறிந்தது.

பாகிஸ்தான் கொடி
  • ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் பகுதிகளில் உள்ள இந்தியாவின் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது பாகிஸ்தான். அவை அனைத்தும் தடுக்கப்பட்டுவிட்டன என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • பாகிஸ்தானுக்கு தக்க பதிலடிகளை ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் மூலம் தந்து வருகிறது இந்தியா.

  • தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்தியாவின் கடற்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

  • இந்தியாவில் உள்ள ஜம்மு, பதான்கோட், ஸ்ரீநகர் உள்ளிட்ட 24 முக்கிய விமான நிலையங்களை மூடியுள்ளது இந்தியா. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • பாகிஸ்தானுக்கு உதவ துருக்கி தனது சரக்கு விமானத்தைப் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.

  • இந்தியாவின் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட் ஆகிய இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • பாகிஸ்தான் விமானம் ஒன்று இந்தியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  • இதுவரை இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'எங்கள் பங்கு தண்ணீரில் கை வைத்தால், கையை வெட்டுவோம்' – இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்

கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்ததையொட்டி, இந்திய...

இன்று கர்நாடகாவில் SIR: 11 பாயின்ட்டுகளில் தேர்தல் ஆணையத்திற்கு `செக்' வைக்கும் கர்நாடகா அமைச்சரவை!

இன்று (ஜூன் 30, 2026) முதல் கர்நாடகாவில் சிறப்பு தீவிர திருத்தம்...

ஷிண்டே அணிக்குத் தாவிய சட்டமேலவை உறுப்பினர் சச்சின்; தொடர்ந்து உத்தவிடமிருந்து விலகும் விசுவாசிகள்!

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி...

’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ – எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை...