6
June, 2026

A News 365Times Venture

6
Saturday
June, 2026

A News 365Times Venture

India Pakistan : `பாகிஸ்தான் ராணுவத்தின் மூன்று விமானத் தளங்களில் இந்தியா தாக்குதல்?’ – பிபிசி தகவல்

Date:

இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் நேற்று முன்தினம் முதல் இரு நாடுகளும் தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் மற்றும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இது தொடர்பாக, பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி,

பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தியா மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “இந்தியா மூன்று பாகிஸ்தான் ராணுவ விமானத் தளங்களில் ஏவுகணைகளை ஏவியது.” எனக் கூறியுள்ளார். ஆனால், இது குறித்து இந்தியா இதுவரையில் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

இந்தியா, பாகிஸ்தான்

பாகிஸ்தான் தொலைக்காட்சி நேரலை ஒன்றில், பாகிஸ்தான் நாட்டின் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சவுத்ரி, “பெரும்பாலான இந்திய ஏவுகணைகளை பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்திய போதிலும், சில ஏவுகணைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்துவிட்டன.

நாட்டின் படைகள் தயாராகவே உள்ளன. இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். எங்களது பதிலடிக்காக காத்திருங்கள்” என்று பேசியுள்ளார்.

இந்தியா மீது பதிலடி தாக்குதல் நடத்த பாகிஸ்தான், ‘ஆபரேஷன் பனியன் மார்சஸ் (Operation Bunyan Marsus)’ என்று பெயரிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ – பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அண்ணா நகர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட...

CJP: பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த இளைஞர்கள் – அவர்கள் சொல்லும் நோக்கம் என்ன?

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு...

"அதிமுக-வுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார்; அதிமுகவை பற்றி பேச..!"- கே.பி முனுசாமி பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை...

தேனி: மலை கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவை; ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சி அமைந்துள்ளது....