11
May, 2026

A News 365Times Venture

11
Monday
May, 2026

A News 365Times Venture

India-Pakistan: “அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்.. ஆனால்'' – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

Date:

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹோண்டுராஸ் தூதரகத்தின் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்று உரையாற்றிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியை திரும்பப் பெறுவது மட்டுமே காஷ்மீர் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய ஒரே பிரச்னை.

ஜம்மு காஷ்மீர்

அதே நேரத்தில் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிரந்தரமாக நிறுத்தும் வரை சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். எனவே எங்கள் நிலைப்பாடு மிக மிகத் தெளிவாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்திய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நேற்று பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்குச் சென்றார்.

ஷெபாஸ் ஷெரீப்

அங்கு ​​இந்தியாவுடனான சமீபத்திய இராணுவ மோதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “நாங்கள் இந்தியா உடன் அமைதிக்காகப் பேசத் தயாராக இருக்கிறோம். அமைதிக்கான பேச்சு வார்த்தை நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்னையும் அடங்கும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமும் லடாக் யூனியன் பிரதேசமும் எப்போதும் அதன் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாகவே இருக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இபிஎஸ் vs சி.வி.சண்முகம்: சட்டசபையில் வெளிச்சத்திற்கு வந்த அதிமுக பூசல்; யாருக்கு எத்தனை MLA ஆதரவு?

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும்...

Vijay: "கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள்" – விஜய் சொன்ன 'வெள்ளை அறிக்கை' என்றால் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, அதே மேடையில் முதல் மூன்று கையெழுத்துகளைப்...

"எனக்கு மட்டும் மகள் இருந்தா…" – MGR-ஐ கவர்ந்த ஜே.சி.டி பிரபாகர்! புது சபாநாயகரின் அரசியல் பயணம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது....

TVK: ஸ்டாலின் முதல் சீமான் வரை – அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்த முதல்வர் விஜய் |Photo Album

ஸ்டாலின் - விஜய் சந்திப்பு: ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி, கைபிடித்து அழைத்துச்...