30
March, 2026

A News 365Times Venture

30
Monday
March, 2026

A News 365Times Venture

Ilaiyaraaja: “என் ஒரு மாத சம்பளத்தை தேசத்துக்காக வழங்குகிறேன்" – இளையராஜா அறிவிப்பு

Date:

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக, நமது உண்மையான ஹீரோக்கள், எல்லைகளில் துணிச்சலுடன், பயத்தைக் கடந்து, துல்லியமாக, செயல்படுவார்கள் என்பதை அறியாமலே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் இசையமைத்த எனது முதல் சிம்பொனிக்கு “Valiant” (மிகுந்த தைரியத்தையும் துணிச்சலையும் குறிக்கும் சொல்) என்று பெயரிட்டிருக்கிறேன்.

இளையராஜா – மோடி

நமது தன்னலமற்ற துணிச்சலான வீரர்கள் எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என நம்புகிறேன்.

ஜய பேரிகை கொட்டடா! கொட்டடா!

ஜய பேரிகை கொட்டடா! – பாரதியார்.

ஒரு பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் “Valiant” முயற்சிகளுக்காக எனது இசை நிகழ்ச்சி கட்டணம், மற்றும் ஒரு மாத சம்பளத்தை “தேசிய பாதுகாப்பு நிதி”க்கு ஒரு சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து...

திமுக: சுரேஷ்ராஜனுக்கு கல்தா; நாகர்கோவில் மேயர் மகேஷுக்கு கன்னியாகுமரியில் சீட் கிடைத்தது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கன்னியாகுமரி மற்றும்...

ஆம்ஸ்ட்ராங்: "என் கணவரின் கொடூரக் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்"- திரு.வி.க நகர் வேட்பாளர் பொற்கொடி

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது....

தவெக: "அத்தனை வலியையும் தாங்கிட்டு உங்களுக்காக வரேன்!' – விஜய் எமோஷனல்

தவெகவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி வருகிறார்....