30
September, 2026

A News 365Times Venture

30
Wednesday
September, 2026

A News 365Times Venture

GPS-ஐ கனிம வளத்துறை இணையதளத்துடன் இணைக்காத வாகனங்களில் கனிமம் ஏற்ற தடை; நாளை முதல் அமல்

Date:

ஜி.பிஎ.ஸ் கருவியை நிறுவி அவற்றை கனிம வள மேலாண்மை அமைப்பின் இணையதளத்துடன் இணைக்காத வாகனங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல நாளை முதல் அனுமதியில்லை.

ஜிபிஎஸ் டேட்டா

கனிம வளத்தைச் சட்டவிரோதமாகக் கடத்துவதைத் தடுக்க, தமிழக அரசின் கனிமவளத்துறை கனிமம் ஏற்றும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொறுத்தி அவற்றை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கனிம வள மேலாண்மை அமைப்பின் இணையதளத்துடன் இணைக்க ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் மூலம் உத்தரவிட்டது.

அந்த அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பிஎ.ஸ் கருவியை நிறுவி அவற்றை கனிம வள மேலாண்மை அமைப்பின் இணையதளத்துடன் (MiMaS Portal) இணைப்பதற்குக் கடந்த 31.08.2026 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்
மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்

ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 6.75 சதவிகித வாகனங்கள் மட்டுமே ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி MiMaS Portal-உடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, 30.09.2026-க்குள் கனிமங்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்தி, அவற்றை MiMaS Portal-உடன் இணைக்கப்பட வேண்டும்.

அப்படி இணைக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே 01.10.2026 முதல் கனிமங்கள் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கப்படும். ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்க இயலாது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்துக் குவாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் 30.09.2026-க்குள் தங்களது வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்தி பதிவு செய்துகொள்ள இறுதியாக அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டின் பல மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இதேபோல் அறிவித்துள்ளனர். ஜி.பி.எஸ் பொறுத்தி MiMaS Portal-உடன் இணைக்கப்படாத வாகனங்கள் 01.10.2026 முதல் கனிமங்களை ஏற்ற முடியாது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தாராபுரத்தில் விஜய் இன்று பிரசாரம்; ஒட்டுமொத்த தொகுதியையும் கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை

தாராபுரம் ( தனி) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக...

"அதிமுக-வுக்கு திமுக வாக்கு கேட்கிறது; திமுக-வுக்கு அதிமுக வாக்கு கேட்கிறது" – ஆதவ் அர்ஜுனா சாடல்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது...

"தமிழ்நாட்டில் தொடர் கொலைக்கும் விலைவாசி உயர்வுக்கும் இடையேதான் போட்டி" – கனிமொழி விமர்சனம்

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (28). இவர் நேற்று...