6
October, 2026

A News 365Times Venture

6
Tuesday
October, 2026

A News 365Times Venture

Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

Date:

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில் விமானியைச் சக விமானி கத்தியால் குத்தினார்.

இந்தத் தாக்குதல் விமானத்தைத் தகர்க்க முயற்சித்ததில் நடந்தது என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்ட விமானி இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார்.

தாக்கிய விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேல் தரப்பு கூறிவருகிறது.

நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசியிருந்தார்.

ஃபிளைதுபாய் விமானம்

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், குற்றம் சாட்டப்படும் விமானி தீவிரவாதி என்பதுபோல தெரிகிறது என்று கூறியிருந்தார்.

நேற்று, ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தந்த பேட்டியில் ட்ரம்ப், “ஈரானுக்கும், இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதைப் பார்த்து வருகிறோம்.

ஆனால், இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஒருவேளை, தொடர்பிருந்தால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” என்று பேசியிருக்கிறார்.

முன்பு இதே கேள்வி நெதன்யாகுவிடமும் கேட்கப்பட்டது…

“ஈரானுக்கும், இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது.

விமானிக்கும் ஈரானுக்கும், வேறு யாருக்காவதும் தொடர்பிருக்கிறதா என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று பதில் சொல்லியிருக்கிறார் நெதன்யாகு.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மாணவியிலிருந்து போராட்டத்தின் முகமாக.! – ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் நேஹா போரா – யார் இவர்?

இந்தியாவின் சமீபத்திய மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்களில் கவனம் பெற்ற ஒருவராக...

தவெக: “ என் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பதற்காக சித்தரிக்கப்பட்டவை" – சர்ச்சை வீடியோ குறித்து சத்யபாமா

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் தவெக...

மதுராந்தகம்: பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு தொகுதியில் வாக்கு இல்லை| Live

பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு தொகுதியில் வாக்கு இல்லைமதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை மொத்த...

“செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு..!" – எம்.பி கனிமொழி

தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை...