2
October, 2026

A News 365Times Venture

2
Friday
October, 2026

A News 365Times Venture

Flydubai-க்கு அனுமதி; இஸ்ரேல் விமானத்திற்கு ‘நோ’ – சவூதி எடுத்த முடிவின் பின்னணி என்ன?

Date:

துபாயின் ஃபிளைதுபாய் விமானத்தில் நேற்று நடந்த அதிர்ச்சிச் சம்பவம் அனைவரும் அறிந்ததே.

இந்த ஃபிளைதுபாய் விமானம் துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குப் பறந்தது. இதில் 174 பயணிகள் பயணித்திருக்கின்றனர். கிட்டத்தட்ட அனைத்துப் பயணிகளுமே இஸ்ரேலியர்களே.

ஃபிளைதுபாய் விமானத்தில் நடந்த விபரீதச் சம்பவம் காரணமாக, அது சவூதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டது.

அதனால், தங்களது பயணிகளை அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் திரும்ப அழைத்துச் செல்ல சவூதியிடம் அனுமதி கேட்டது இஸ்ரேல்.

சவூதி அரேபியா

ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு அதிகாரப்பூர்வத் தூதரக உறவுகளும் இல்லை என்பதால், தங்களது எல்லைக்குள் இஸ்ரேலின் ராணுவ விமானம் வரக்கூடாது என்று இஸ்ரேலின் கோரிக்கையை மறுத்துவிட்டது சவூதி அரேபியா.

பிறகு, எப்படி ஃபிளைதுபாய் விமானத்திற்கு மட்டும் சவூதி அனுமதி கொடுத்தது என்கிற கேள்வி நியாயமானதே.

மனிதநேயத்தின் அடிப்படையில் மட்டும் அவசரத் தரையிறக்கத்திற்கு அனுமதி கொடுத்தோம் என்று சவூதி தரப்பு கூறுகிறது.

கூடவே, காயமடைந்த விமானிக்கு சவூதியின் தபூக்கில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு எப்படிப் பயணிகள் இஸ்ரேலுக்குச் சென்றனர்?

முதலில் இன்னொரு ஃபிளைதுபாய் விமானத்தின் மூலம் பயணிகளை இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதே நிறுவனத்தின் விமானத்தில் பயணிக்கப் பயணிகள் தயங்கியிருக்கின்றனர்.

இதனால், வேறு நிறுவனத்தின் பயணிகள் விமானம் மூலம் இஸ்ரேலுக்குச் சென்றிருக்கின்றனர் பயணிகள். இந்தத் தகவல்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“மதிமுக-வை அழிக்க 33 ஆண்டுகளாக முயற்சி செய்தது திமுக!” – துரை வைகோ சொல்வது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க வடக்கு மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம்...

மதுராந்தகம்: "தவெக அதிக பணம் தருகிறது; நீங்களும் கொஞ்சம் தாருங்கள் என்கிறார்கள்” – பெ.சண்முகம் ஷாக்

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த அனைத்துக் கட்சிகளும் தவெகவின் ‘மதச்சார்பற்ற...

புதுச்சேரி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 2,500 கிராம் தங்கம் நாணயங்கள் பறிமுதல்

புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில்...

Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில் விமானியைச் சக விமானி...