29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

`Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்

Date:

2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இதற்கு முன் 5 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், இன்று 6-வது எம்.எல்.ஏ-வாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

எம்.ஆர் விஜயபாஸ்கர்

இந்நிலையில் இதனை விமர்சனம் செய்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.

இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.

“தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று விமர்சித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விசிக: `திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா..?' – திருமாவளவன் விளக்கம்!

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,...

ஜூலை-2ல் விஜய் உடன் ஐக்கியமாகும் 'விஜயபாஸ்கர்கள்'- இணைப்பு விழாவுக்கு தயாராகும் ரத்தத்தின் ரத்தங்கள்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரைச் சுற்றி வரும் தவெக சஸ்பென்ஸ் பல நாள்களாக...

`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல…' – தொல்.திருமாவளவன்

ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவிற்கு...

சதுரகிரி: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரோப் கார் சேவை திட்டம்! – நிறைவேற்றுமா புதிய அரசு?

தென் மாவட்டங்களில் பழனிக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள பிரசித்தி பெற்றது சதுரகிரி சுந்தர...