29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

விசிக: `திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா..?' – திருமாவளவன் விளக்கம்!

Date:

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “முதல்வர் கரூர் செல்லவிருப்பதாக எழுந்த செய்திகள் வெளியாகின்றன. முதலமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில், இந்த எதிர்பார்ப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் உள்ளது. வி.சி.க கூட்டணியை விட்டு வெளியேறப் போவதாகவும், திருச்சி கிழக்கு தொகுதியைக் கேட்க முயற்சிப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. நான் எந்தவொரு இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன்.

முதல்வர் விஜய்

இது தொடர்பாக த.வெ.க தலைமைக்கு விசிக எந்தவித அழுத்தத்தையும் தரவில்லை. எந்த இலாகாவையும் மாற்றித் தருமாறும் கோரவில்லை. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் திடீர் திடீரென பதவி விலகும் சூழல் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. இது குதிரை பேரமா என்றால், அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்பதால் என்னால் கருத்து கூற முடியாது. அதேநேரம், இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறோம்.

முதலமைச்சர் வழங்கும் தேநீர் விருந்துக்கு அமைச்சர்கள் என்னை நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்துள்ளனர். ஆதரவு அளிக்கும் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு தேநீர் விருந்து போல ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில் முதலமைச்சர் பங்கேற்றுப் பேசவிருக்கிறார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகே என்ன விவாதிக்கப்பட்டது என்பது முழுமையாகத் தெரியவரும்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

காங்கிரஸ்: “என்னை விடுவிக்குமாறு தலைமையிடம் நானே கேட்டுக்கொண்டேன்" – செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு மாநில காங்கிரஸின் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று...

ஜூலை-2ல் விஜய் உடன் ஐக்கியமாகும் 'விஜயபாஸ்கர்கள்'- இணைப்பு விழாவுக்கு தயாராகும் ரத்தத்தின் ரத்தங்கள்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரைச் சுற்றி வரும் தவெக சஸ்பென்ஸ் பல நாள்களாக...

`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல…' – தொல்.திருமாவளவன்

ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவிற்கு...

`Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக...