23
April, 2026

A News 365Times Venture

23
Thursday
April, 2026

A News 365Times Venture

DOGE “வந்த வேலை முடிந்துவிட்டது, அதனால்..'' – டிரம்ப் அரசில் இருந்து விலகும் எலான் மஸ்க்?

Date:

அமெரிக்க அரசின் செலவைக் குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான DOGE துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் சூசகமாகக் கூறியிருக்கிறார்.

எலான் மஸ்க் – ட்ரம்ப்

அதிபர் ட்ரம்ப் பதவி ஏற்றவுடன் எலான் மஸ்க்கிற்கு அரசு செலவுகளைக் குறைக்கும் DOGE துறை ஒதுக்கப்பட்டது. அதனை நிர்வகித்து வரும் மஸ்க் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். DOGE துறை குறித்து பேசிய அவர், “நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தினசரி $4 பில்லியன் வரை செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

முதல் 130 நாள்களுக்குள் பற்றாக்குறையை ஒரு டிரில்லியன் டாலர்கள் குறைக்கத் தேவையான பெரும்பாலான பணிகளை முடித்துவிட்டோம்.

தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும் முறைகேடுகளைக் கண்டறிந்து நிறுத்துவதும் தான் எங்கள் முதல் நோக்கம். இதற்காகவே நாங்கள் வேலை செய்து வருகிறோம். எங்களின் நடவடிக்கையால் $4 பில்லியன் டாலர் சேமிக்க முடிகிறது.

எலான் மஸ்க்

இதுவரை நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியைத் தருவதாகவே இருக்கிறது. எங்கள் நடவடிக்கை வெற்றி அடையாமல் போனால் அமெரிக்கா கடனில் மூழ்கிவிடும்.

முக்கியமான அரசு சேவைகளையும் பாதிக்காமல் 15 சதவீதம் வரை செலவைக் குறைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். இந்த பணிகளை எல்லாம் முடித்துவிட்டு மே மாதம் நான் DOGE துறையில் இருந்து விலகலாம்” என்று கூறியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த நம்பிக்கை இருக்கிறது..!' – நடிகர் யோகி பாபு

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள்...

மேற்கு வங்கம்: "தாமரை எங்கும் மலரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்ளுக்கு.!"- மோடி வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ...

இன்று தமிழ்நாடு 80% வாக்கு சதவிகிதத்தை தொடுமா? – Tough போட்டி கொடுக்கும் 2021-ம் ஆண்டு தேர்தல்!

இன்னும் சில மணி நேரத்தில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்...

’மஞ்சள் துண்டு போடுவதில் என்ன பிரச்சனை?’ – அதிகாரிகளிடம் கடுகடுத்த செந்தில் பாலாஜி!

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த தி.மு.க பூத்...