சில தினங்களுக்கு முன் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டதுதான் ராஜ்யசபா பதவி. ராஜ்ய சபா தேர்தலுக்கான நாள் வரும்போது தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப் பூர்வமாக அறிவிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “உங்கள் கூட்டணியில் இருக்கும் தேமுதிக-விற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “தேமுதிக-விற்கு மாநிலங்களவையில் ஒரு சீட் வழங்குவதாக அதிமுக கூறியதா? யாரோ சொல்வதை வைத்துகொண்டெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்.
தேர்தல் அறிக்கையில் நாங்கள் எதாவது சொன்னோமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்நிலையில், அதைத்தொடர்ந்து, தேமுதிக-வின் மறைந்த தலைவர் விஜயகாந்த்தின் எக்ஸ் பக்கத்தில், “சத்தியம் வெல்லும் நாளை நமதே! # DMDKForTn, #DMDKFor2026” என்று பதிவிடப்பட்டிருக்கிறது.

ஆனால் பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது. இது அரசியல் வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
