25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

Delimitation: `அவைக்குள் இதை அனுமதிக்க முடியாது!' – திமுக எம்பி-க்களை உடைமாற்ற உத்தரவிட்ட சபாநாயகர்

Date:

மக்கள்தொகை அடிப்படையிலான மக்களவை தொகுதிகள் வரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களுடன் டி. ஷார்ட் அணிந்த தி.மு.க எம்.பி.க்களுக்கு சபாநாயகர் ஒ.எம். பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே, “#fairdelimitation. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” எனும் வாசகம் பொறிக்கப்பட்ட டி.ஷர்ட் அணிந்திருந்த திமுக எம்.பி-கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். காலை 11 மணிக்கு அவை தொடங்கியபோது, அதே ஆடையுடன் அவைக்குள் நுழைந்தனர். அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தை பராமரிக்க வேண்டும் என்று கூறும் சபையின் நடைமுறைகளின் விதி 349 ஐ மேற்கோள் காட்டி, டி-சர்ட்களில் உள்ள வாசகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

திமுக எம்.பி-கள்

மேலும், “தலைவர் யாராக இருந்தாலும் இதுபோன்ற கண்ணியமற்ற உடையை சபைக்குள் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியே சென்று, உடைகளை மாற்றி, சரியான உடையில் வாருங்கள்” என்றார். அதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தி.மு.க எம்.பி. கனிமொழி, “அவைத் தலைவர் டி-சர்ட்டுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தது எங்களின் போராட்டத்துக்கான புதிய முன்னேற்றம். பா.ஜ.க உட்பட பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதற்கு முன்பு கோஷங்கள் எழுதப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை, ​​அவர்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிரமாண்ட ஸ்வர்ணகிரி; `ஆந்திராவின் KGF' – சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தில் உள்ள ஜொன்னகிரி...

PMK: இணைந்த தந்தை – மகன் இதயங்கள்! – இக்கட்டில் சேலம் அருள் போன்ற 2-ம் கட்ட தலைவர்கள்?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி...

‘சார்… ஆபீஸுக்கு ரெய்டு வருது!’ கசியும் தகவல் டு மாண்புமிகுவால் கொதிக்கும் மா.செ-க்கள்! | கழுகார்

முன்கூட்டியே கசியும் தகவல்‘சார்... உங்க ஆபீஸுக்கு ரெய்டு வருது!’லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக...