10
October, 2026

A News 365Times Venture

10
Saturday
October, 2026

A News 365Times Venture

Delhi Protest: அபிஜித் தீப்கேவின் பாட்டி காலமாகிவிட்டாரா? டெல்லி காவல்துறை சொல்வது என்ன?

Date:

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன.

ஆனால் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது

டெல்லியில் இன்று காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயக்கப்பட வேண்டிய 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போராட்டம் நடத்த குவிந்து வரும் இளைஞர்களை காவல்துறை உடனுக்குடன் கைது செய்து வருகின்றனர்.

டெல்லியில் விமானத்தில் வைத்தே சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் கட்சி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தவிர டெல்லியில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் டெல்லி போலீசார் குண்டுகட்டாகக் கைது செய்திருக்கின்றனர்.

அதேபோல் டெல்லி சவுத் அவென்யூ பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், டோலா சென் உள்ளிட்டோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜியும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனிடையே சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கேவின் பாட்டி உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அபிஜித் தீப்கே.
அபிஜித் தீப்கே

இதை அபிஜித்-க்குத் தெரியப்படுத்தி உள்ளதாகவும், காவலில் இருந்தபடியே போராட்டத்தைத் தொடர விரும்புகிறாரா? அல்லது மகாராஷ்டிரா செல்ல விரும்புகிறாரா? என்பதை அவரே முடிவு செய்யலாம் எனப் போலீசார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இடைத்தேர்தல்: எடப்பாடிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி… எஸ்.பி.வேலுமணி அணியின் மெகா திட்டம்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு கலகத்தை உண்டாக்கியிருக்கிறது....

டெல்லி: "எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியல" – போலீஸ் ஜீப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட CPM MP

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர்...

'வறட்சி, நிதி பற்றாக்குறை' – மாணவர்களுக்கு சம்பளப் பணத்தில் மதிய உணவளிக்கும் மகாராஷ்டிரா ஆசிரியர்கள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை மாநில அரசு...

அதிமுக: இடைத்தேர்தல் தோல்வி; உச்சத்தில் உட்கட்சி பூசல்–எஸ்.பி. வேலுமணியின் அடுத்த மூவ் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது....