3
November, 2026

A News 365Times Venture

3
Tuesday
November, 2026

A News 365Times Venture

Delhi: 'டெல்லியின் வளர்ச்சிகளை பாஜக உறுதி செய்யும்.!' – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

Date:

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை அமைக்கும் சூழல் நிலவுகிறது. இதையொட்டி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டம்

மேலும் டெல்லி சட்டமன்ற தேர்தல் வெற்றி உறுதியாவதைத் தொடர்ந்து மாலை 7 மணி அளவில் டெல்லி பா.ஜ.க அலுவலகத்திற்கு மோடி செல்ல இருப்பதாகவும், அங்கு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “ வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு எனது நன்றிகள். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. டெல்லியின் அனைத்து துறையின் வளர்ச்சிகளையும் பாஜக உறுதி செய்யும்.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

டாடா குழும பிரச்னை: "அவர்களுக்குள்ளேயே சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்" – நிர்மலா சீதாராமன்

டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் டாடா அறக்கட்டளையின்...

’அம்பாசமுத்திரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியா?’ – மு.வீரபாண்டியன் சொல்வது என்ன?

கோவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்....

`வேலை பறிபோனால் என்ன செய்யலாம்? உங்கள் உரிமைகள் என்னென்ன?' சட்டம் சொல்வது என்ன? – 10

``நாளையிலிருந்து நீங்கள் வேலைக்கு வர வேண்டாம்!” இந்த ஒற்றை வாக்கியம்...

“சட்டம் ஒழுங்கு பிரச்னையைப் போராட்டம் மூலம் ஊதிப் பெரிதாகக் காட்டுகிறார்கள்" – அமைச்சர் வன்னி அரசு

அரசுக் கல்லூரி மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாநில...