2
September, 2026

A News 365Times Venture

2
Wednesday
September, 2026

A News 365Times Venture

Delhi : 'மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்'- பர்வேஷ் வர்மா கூறியதென்ன?

Date:

புதுடெல்லி தொகுதியில் 3 முறை வென்ற முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை தோற்கடித்து புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கிறார்.

டெல்லியை கடந்த மூன்று வருடங்களாக ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி டெல்லியில்  70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் அதிக கவனம் பெற்ற தொகுதி புது டெல்லி.

பர்வேஷ் வர்மா – கெஜ்ரிவால்

அந்தத் தொகுதியில் டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா களமிறங்கினார். சுமார் 4000 வாக்கு வித்தியாசத்தில் பர்வேஷ் வர்மா கெஜ்ரிவாலைத் தோற்கடித்து வெற்றி பெற்று இருக்கிறார். பர்வேஷ் வர்மா டெல்லி முதல்வராக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பர்வேஷ் வர்மா
பர்வேஷ் வர்மா

வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய    அவர், “இந்த வெற்றிக்காக பிரதமர் மோடிக்கும் டெல்லி மக்களுக்கும் நன்றி. மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கார்ட்டூன்

Source link

தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை; எந்தெந்தக் கோயில்கள்?|முழுப் பட்டியல்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை...

தமிழ்நாட்டில் GST வசூல் 1% குறைந்துள்ளது; தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? – TRB ராஜா கேள்வி

தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாதம் ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப்...

`பிரதமர் முகம் விஜய்'- தவெக ஸ்டன்ட், அப்செட்டில் விசிக; கொந்தளிக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்!

'இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்' என தமிழக வெற்றிக் கழக...