28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

BJP: "கூட்டணி உடைய வாய்ப்புள்ளதால் நயினார் அப்படிச் சொல்கிறார்" – பிரேமலதா விஜயகாந்த் சொல்வது என்ன?

Date:

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று (மே 23) தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் மிகப்பெரிய மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து எல்லா முடிவுகளையும் அறிவிப்போம்,” என்று தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்

அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு, “தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

மக்களின் வரிப்பணத்தை லஞ்சமாகவோ, ஊழலாகவோ பயன்படுத்தினால், கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

கேப்டன் கூறியபடி, லஞ்சம், ஊழல் இல்லாத நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

நீட் தேர்வு, டாஸ்மாக் ஒழிப்பு, விலைவாசி குறைப்பு எனப் பல வாக்குறுதிகளை ஆளும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை,” என்று கூறினார்.

“இன்னும் தேர்தலுக்கு எட்டு, ஒன்பது மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் அவர்கள் ஏதாவது செய்வார்களா என்று பார்ப்போம்.அப்படிச் செய்யவில்லை என்றால்,

மக்கள்தான் எஜமானர்கள்; 2026-ல் நல்ல தீர்ப்பைக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

நயினார், எடப்பாடி பழனிசாமி
நயினார், எடப்பாடி பழனிசாமி

இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினர் குறித்து பா.ஜ.க-வினர் விமர்சிக்கக் கூடாது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, “கூட்டணி அமைத்த பிறகு, அதற்குள் சலசலப்பு வந்துவிட்டால், கூட்டணி பிரிய வாய்ப்புகள் உள்ளன.

அதனால், கருத்துகள் சொல்வதை அவர்கள் கட்டுப்படுத்துகின்றனர்,” என்று பதிலளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதிய ஆட்சி அமைந்த 'அடுத்த நாளே'… நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஒலி 'அதிரடி' கைது

2025-ம்‌ ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நேபாளத்தில் 'Gen Z'யினர்...

"திருமணமான ஆண் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பது சரியா?" – குஷ்பு ஷாக்

திருமணமான ஒருவர் வேறொருவருடன் 'லிவ்-இன்' உறவில் இருப்பது குற்றமல்ல என்று அலகாபாத்...

பி.டி.ஆருடன் மோதும் சுந்தர்.சி! – மதுரை மத்தி தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளரானது எப்படி?

நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி புதிய நீதி கட்சி சார்பாக போட்டியிட போவதாக...

'சபரிமலையில் கொள்ளையடித்த தங்கத்தை மரியாதையாக கொண்டு வையடா!' – பிரசாரத்தில் ஆவேசமான சுரேஷ் கோபி

கேரளத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்...