18
July, 2026

A News 365Times Venture

18
Saturday
July, 2026

A News 365Times Venture

'BC மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் அதிகாரம் இல்லை!' – பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சை பதில்!

Date:

ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகவும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் பதில் கூறியிருக்கிறது.

தலைமைச் செயலகம்

ஆம் ஆத்மி கட்சியின் மாநில வழக்கறிஞர் அணியை சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் முக்கியமாக, ‘ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகவும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றம் புரிபவர்களின் மனநிலையையும் சமூக சூழலையும் ஆய்ந்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ‘இது எங்களின் ஆய்வு வரம்புக்குள் வராது’ எனக் கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சங்கர், ‘SC/ST ஆணையம் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுக்கு நான்கு முறை விழிப்புணர்வு முகாம்களை நடத்தியிருக்கிறது. எனில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சாதிய வன்கொடுமைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் என்ன? பல சாதிய வன்கொடுமைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய மனோபாவத்தோடு நடந்துகொள்கின்றனர்.

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பதில்
பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பதில்
வழக்கறிஞர் சங்கர்
வழக்கறிஞர் சங்கர்
ஆம் ஆத்மி கடிதம்
ஆம் ஆத்மி கடிதம்

அதேமாதிரி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள்ளாகவே பிரிவினைகளால் மோதலும் ஏற்படுகிறது. இதையெல்லாம் தவிர்க்க அவர்களின் சமூக சூழலை புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தானே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த அடிப்படை விஷயத்தை கூட ஆணையத்தால் செய்ய முடியாது எனக் கூறுவது வேதனையளிக்கிறது’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியது ஏன்?' – இயக்குநர் களஞ்சியம் விளக்கம்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக இயக்குநர் களஞ்சியம் அறிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக...

"நான் சாதி வெறியன் கிடையாது… ஆணவப்படுகொலை தடுப்பு சட்டத்தை ஆதரிக்கிறேன்!" – சொல்கிறார் கருணாஸ்

ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்றுவதற்காக கடந்தகால தி.மு.க அரசு, ஓய்வுபெற்ற நீதியரசர்...

பழனி கோயில் நில மோசடி: “அடுக்கடுக்கான கேள்வி; பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன" – CPM கே.பாலகிருஷ்ணன்

பழனி ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளைக் கைது...

பழனி கோயில் நில மோசடி: சார்பதிவாளர், நிலத்தை வாங்கியவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி...