விவேக் ராமசாமி – தொழிலதிபர், இந்தியா வம்சாவளி, ட்ரம்ப் ஆதரவாளர், எலான் மஸ்க்கின் நண்பர்… என்பதையெல்லாம் தாண்டி இவருக்கு இனி புதிய வேறொரு அடையாளம் உருவாக வாய்ப்பு அமைந்திருக்கிறது.
அமெரிக்காவின் ஓஹியோவில் பிறந்தவர் விவேக் ராமசாமி. இந்த மாகாணம் தற்போது அடுத்த ஆளுநர் தேர்தலை சந்திக்க உள்ளது. அந்தத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருக்கிறார் விவேக் ராமசாமி.
இதுக்குறித்து அவர் பேசுகையில், “ஓஹியோவின் அடுத்த ஆளுநர் தேர்தலில் போட்டியிடுவதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். நான் ஓஹியோவை புதிய தொழில்களை தொடங்குவதற்கான அமெரிக்காவின் டாப் மாகாணமாய் மாற்றுவேன். முதலாளித்துவதும், அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் ஓஹியோவை டாப் நாடாக மாற்றுவேன்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எலான் மஸ்க்கின் பங்கு எப்படி உள்ளதோ, அதே மாதிரி விவேக் ராமசாமிக்கு ட்ரம்ப்பின் வெற்றியில் பங்கு உண்டு.
விவேக் ராமசாமி ஆளுநர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ட்ரம்ப், “ஓஹியோ கவர்னர் பதவிக்கு விவேக் ராமசாமி போட்டியிடுகிறார். எனக்கு அவரை நன்கு தெரியும், அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். அவர் ஸ்பெஷலானவர். அவர் இளமையானவர், வலிமையானவர் மற்றும் புத்திசாலி! விவேக் மிகவும் நல்ல மனிதர், அவர் நம் நாட்டை உண்மையாக நேசிக்கிறார். அவர் ஓஹியோவின் சிறந்த ஆளுநராக இருப்பார், உங்களை ஒருபோதும் வீழ்த்த மாட்டார், மேலும் என்னுடைய முழுமையான மற்றும் மொத்த ஆதரவு அவருக்கு தான்!” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க், “குட் லக், என்னுடைய முழு ஆதரவும் உங்களுக்கே!” என்று பதிவிட்டுள்ளார்.
ஓஹியோ ஆளுநர் தேர்தல் அடுத்த வருடம் தான் நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போது ஓஹியோவின் கவர்னராக இருக்கும் ஜான் ஹஸ்டெட் அமெரிக்க செனட் பதவியை ஏற்பதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதால் இப்போது தேர்தல் நடக்க உள்ளது.
ஜனவரி மாதமே இந்த பதவி குறித்து பேசப்பட்டது. அப்போது முதல் இப்போது வரை அந்த மாநிலத்தின் பொருளாளர் மற்றும் செயலாளர் விவேக் ராமசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம், ஓஹியோவின் ஆளுநர் பதவிக்காக தொழிலதிபர் ஒருவரும், அம்மாகாணத்தின் முன்னாள் சுகாதார இயக்குநரும் போட்டியிடுகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
