3
August, 2026

A News 365Times Venture

3
Monday
August, 2026

A News 365Times Venture

All Party Meet: "விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட முக்கியம்!" – டி.கே. சிவக்குமார்

Date:

காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், “மாநிலத்தின் நலன் மற்றும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட மிகவும் முக்கியமானது.

Karnataka All Party Meet

மாநிலத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பதுதான் கர்நாடகாவின் பாரம்பரியம்.

எப்போதுமே குடிநீர் தேவைகளுக்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்பதே நமது அரசின் உறுதியான நிலைப்பாடு. இந்த முடிவில் நீங்கள் அனைவரும் என்னோடு முழுமையாக உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன்.” எனக் கூறியிருக்கிறார்.

மேலும், காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் குறித்தும், மத்திய அமைச்சர்கள் சி.ஆர். பாட்டீல், பிரகலாத் ஜோஷி, வி. சோமண்ணா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைகள் பற்றியும் கூட்டத்தில் டி.கே. சிவகுமார் விளக்கியிருக்கிறார்.

DK Shivakumar - Karnataka All Party Meet
DK Shivakumar – Karnataka All Party Meet

2.5 மணி நேரம் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் வீரப்ப மொய்லி, சித்தராமையா, பி.எஸ். எடியூரப்பா, எச்.டி. குமாரசாமி, டி.வி. சதானந்த கௌடா, பசவராஜ் பொம்மை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா உட்படப் பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அட்டைப்படம்

Source link

'வாக்குச்சாவடி எண் 75; வாக்கு எண் 412' – கொளத்தூர் EVM மெஷினில் என்ன பிரச்னை ஏற்பட்டது?

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் கொளத்தூர் தொகுதியின் 14 பூத்களின் EVM மெஷின்களில்...

"காவிரி நம்மை பிரிப்பதற்குப் பதிலாக, ஒன்றிணைக்கட்டும்!" – விஜய்க்கு கர்நாடகா பாஜக சமாதான கடிதம்!

இந்தியாவில் எந்த மாநிலத்தில் காங்கிரஸும், பாஜகவும் ஒரு விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில்...

கபினி அணை நீர்மட்டம் உயர்வு; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த கர்நாடகா!

தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் தற்போது திறந்துவிடப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு...