30
June, 2026

A News 365Times Venture

30
Tuesday
June, 2026

A News 365Times Venture

ADMK: “ஓபிஎஸ் 6 மாசம் அமைதியா இருந்தா, எடப்பாடியிடம் அவருக்காக பேசுவோம்'' -ராஜன் செல்லப்பா பேச்சு

Date:

ஓபிஎஸ் யை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஒரு 6 மாதத்திற்கு அவர் அமைதியாக இருக்க வேண்டுமென அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார்.

ராஜன் செல்லப்பா

சமீபத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

‘கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு உரிமையில்லை.’ என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ், ‘எப்படியானாலும் தர்மமே வெல்லும். நான், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இணைய எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.’ என்று பேசியிருந்தார்.

 ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

இதனைத் தொடர்ந்தே இன்று மதுரை மேலூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜன் செல்லப்பா, ”அதிமுக வளர வேண்டுமமென்றால் ஓபிஎஸ் போன்ற யாருமே நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது. ஒரு ஆறு மாதத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும். அப்படி அமைதியாக இருந்தால் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியிடம் சென்று அவருக்காக பேசுவோம்.’ எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை: `தவெக ஆட்சி ஐந்தாண்டுகள் தொடர வேண்டும்; விசிக நிலைப்பாடு இதுதான்!' – திருமாவளவன்

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களைச்...

`கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியாது' – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கணவரை விட கணிசமாக அதிக ஊதியம் பெறும் மனைவி, அவரிடமிருந்து ஜீவனாம்சம்...

'ஸாரி… எங்களால தோழமை கூட்டத்துக்கு வர முடியாது!' – முதல்வரின் அழைப்பை நிராகரித்த கம்யூனிஸ்ட்டுகள்?

முதல்வர் விஜய் தலைமையில் நாளை தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது...

அணுக்கனிம சுரங்கத் திட்டம்: “மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும்…" – அன்புமணி ராமதாஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 எக்டர் பரப்பளவு கொண்ட...