12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதியேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! – யார் இவர்?

Date:

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச்.12) பதவியேற்றிருக்கிறார்.

தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து கேரள ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

யார் இந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்?

1954 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் பனாஜியில் பிறந்தவர். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.

தனது ஆரம்பக் கல்வியை கோவா மாநிலத்தின் வாஸ்கோடகாமாவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனத்தில் பயின்ற இவர்

பின்னர் அதே பகுதியில் உள்ள எம்.இ.எஸ். கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

அவரது இளமைக் காலத்திலேயே சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்.

சிறை சென்ற அனுபவம்

இவரது தந்தை ஜனசங்கத்தின் கோவா மாநிலத் தலைவராக இருந்தவர். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆர்எஸ்எஸ் உடன் ஆரம்பத்தில் இருந்தே தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்.

பின்னர் 1989 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் தீவிரமாக செயல்பட தொடங்கினார்.

இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்த 1975 முதல் 1977 வரை இருந்த காலகட்டத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து சிறை சென்ற அனுபவமும் இவருக்கு இருக்கிறது.

 ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

கோவா சபாநாயகராக…

2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை கோவா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார். மேலும் 2003 முதல் 2007 வரை கோவா மாநில பாஜக தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அதேபோல 2012 முதல் 2017 வரை கோவா சபாநாயகராக பதவி வகித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் கோவா சட்டமன்றத்தை இந்தியாவின் முதல் டிஜிட்டல் சட்டமன்றமாக அதாவது காகிதம் இல்லா சட்டமன்றமாக மாற்றியிருக்கிறார். இது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இமாச்சல், பீகார் மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்திருக்கிறார். தொடர்ந்து கடந்த ஆண்டு கேரள மாநிலத்தின் 23 ஆவது ஆளுநராகப் பதவியேற்ற இவர் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுராக பதவியேற்றிருக்கிறார்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Chennai : 'ஸ்டாக் இல்லை' – காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!

அமெரிக்கா - ஈரான் போரால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற...

ஐநா: ஈரானுக்கு எதிராக வாக்களித்த இந்தியா; வெளிநடப்பு செய்த ரஷ்யா, சீனா! – என்ன நடந்தது!

அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கி இன்று 13...

`கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' – ஈரான் கப்பலை தாக்கியது குறித்து ட்ரம்ப்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கி...