11
March, 2026

A News 365Times Venture

11
Wednesday
March, 2026

A News 365Times Venture

சிலிண்டர் தட்டுப்பாடு: "உங்களுக்கு சிலிண்டர் வேண்டுமா? நான் தருகிறேன்" – நயினார் நாகேந்திரன்

Date:

திருச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “நாளை பிரதமர் தலைமையில் திருச்சி பஞ்சப்பூரில் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், என்.டி.ஏ-வின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.க தலைவர் ஜி.கேவாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், த.ம.மு.க தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நாளை நடைபெறும் விழா தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான விழாவாக இருக்கும். இதில், 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள். பிரதமர் தலைமையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாது. விரைவில் நாங்கள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம். தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க தான் வெல்லும் என முதலமைச்சர் கூறுகிறார்.

nainar nagenthiran

ஆனால், யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்கப் போவது தமிழக மக்கள்தான். தி.மு.க ஆட்சிக்கு வந்து 28 மாதம் 1000 கொடுக்கவில்லை. பாராளுமன்றத் தேர்தல் வந்ததால் அதைக் கொடுத்தார்கள். இந்தாண்டு தேர்தலால் பொங்கல் பணம் கொடுத்தார்கள்.

விஜய்யை சி.பி.ஐ விசாரணைக்கு அழைத்துள்ளது. சி.பி.ஐ , அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமான அமைப்பு. எங்கள் கூட்டணியில் புது கட்சிகள் வரலாம். ஆனால், விஜய் வருவது குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய். நான் கேஸ் டீலர் எங்கு உங்களுக்கு சிலிண்டர் வேண்டுமோ நான் தருகிறேன். ஹோட்டல்களில் உணவுகளைக் குறைத்ததற்கும் சிலிண்டருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஹோட்டல்களில் உணவு இல்லை என எதிர்க்கட்சிக்காரர்கள் எழுதி போட்டிருப்பார்கள்.

அ.தி.மு.க தனித்துதான் ஆட்சி அமைக்கும். தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மற்ற கட்சிகள் குறித்து தி.மு.க கவலைப்பட வேண்டியதில்லை.

விஜய் தங்களுடைய கட்சியின் கொள்கை என்ன என்பதைத் தெளிவுபடுத்தி விட்டு கொள்கை எதிரி பா.ஜ.க எனக் கூறட்டும். வெறும் கொள்கை என்கிற வார்த்தையை மட்டும் கூறுவதால் அதற்கு என்ன அர்த்தம் எனத் தெரியவில்லை. சீனி என எழுதி வைத்தால் மட்டும் இனிக்காது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எம்ஜிஆர், ஜெயலலிதா சாதித்தது பழனிசாமியால் சாத்தியாமா? | ‘வாவ்’ வியூகம் 09

எம்ஜிஆர், ஜெ. சாதித்தது பழனிசாமியால் சாத்தியாமா?‘வாவ்’ வியூகம் 09திமுக பெருந்தலைகள் ஆரம்ப...

திருச்சி: "இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை" – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

திருச்சியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக...

"சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன?"- அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர்...

பிரதமரின் தமிழ்நாடு வருகை; ரூ.5,650 மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் மோடி!

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில்,...