11
August, 2026

A News 365Times Venture

11
Tuesday
August, 2026

A News 365Times Venture

Trump: 'புதின் ஆசை இதுவே…' – நண்பரை பற்றி மனம் திறக்கும் ட்ரம்ப்!

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் – இருவரும் நல்ல நண்பர்கள் என்பது உலகம் அறிந்ததே.

‘நான் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பே, ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பேன்’ என்று தேர்தல் பிரசாரத்தின் போதே ட்ரம்ப் கூறியிருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்தம் சம்பந்தமாக ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் பலமுறை பேசியுள்ளேன். எத்தனை முறை என்று சொல்லமாட்டேன். போர்களத்தில் பலர் இறப்பது புதினுக்கும் மிகுந்த வருத்தம் தான். இப்படி மக்கள் இறப்பதை பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில்…

2022-ம் ஆண்டு, அமெரிக்காவின் அதிபராக நான் இருந்திருந்தால், இந்த போரே தொடங்கியிருக்காது. எனக்கும், புதினுக்கும் நல்ல உறவு இருக்கிறது.

ஜோ பைடன் நாட்டுக்கு ஓர் அவமானம் ஆவார்.

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முழுமையான திட்டம் என்னிடம் உள்ளது. போர் விரைவில் நிற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பல பேர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைன் மிக மோசமான நிலையில் உள்ளது.

உக்ரைனில் அமைதி நிலவ அமெரிக்கா உதவுவதற்கு, உக்ரைன் நாட்டில் உள்ள அரிதான கனிமங்கள் மற்றும் வாயுவை எடுப்பதற்கான 500 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அமெரிக்கா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போட்டுக் கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"எங்களுக்கு அப்படியொரு பயம், முதல்வர் தினம் தினம்..!"- எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு ஆனந்த் பதில்

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில்...

`இளம் வயதினருக்கு வாய்ப்பு கொடுங்கள்' – திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மன்னார்குடி நிர்வாகி கோரிக்கை

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு `வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை...

ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்!

ஈரான் விஷயத்திலும் சரி... காசா விஷயத்திலும் சரி... அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு...

பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு' – தவெக அரசு அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து...