26
September, 2026

A News 365Times Venture

26
Saturday
September, 2026

A News 365Times Venture

Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் – தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?

Date:

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.

2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த மாநிலங்களுக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகி உள்ளன என்பதைப் பார்ப்போம்.

தமிழ்நாடு

1. தமிழ்நாடு

> 2025-ம் ஆண்டு, அரிய பூமி நிரந்தர காந்தங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ், கனிம வளங்கள் மிகுந்த மாநிலங்களான ஒடிசா, கேரளா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாட்டில் ‘அரிய கனிமவள வழித்தடங்கள்’ நிறுவப்படும்.

> மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பொதிகை மலையில் மலைப்பாதைகள் அமைக்கப்படும்.

> தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் பறவைகளைப் பார்வையிடும் பாதைகள் அமைக்கப்படும்.

> ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் பகுதிகளில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்.

> ஐதராபாத் – சென்னை, சென்னை – பெங்களூரு இடையே அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும்.

2. கேரளா

> கேரளாவில் ‘அரிய கனிமவள வழித்தடங்கள்’ நிறுவப்படும்.

> அங்கு ஆமைப்பாதை அமைக்கப்படும்.

> தேங்காய் உற்பத்தியில் போட்டித்தன்மையை மேலும் அதிகரிக்க, பல்வேறு தலையீடுகள் மூலம் உற்பத்தியை அதிகரிக்கவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் ‘தேங்காய் ஊக்குவிப்புத் திட்டம்’.

இதன் மூலம் பழைய, காய்க்காத மரங்கள் மாற்றப்படும்.

கேரளா
கேரளா

3. மேற்கு வங்கம்

> மேற்கு வங்காளத்தின் டான்குனியிலிருந்து குஜராத்தின் சூரத் வரை புதிய பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும்.

> பூர்வோதயாவின் கீழ், கிழக்கு கடற்கரைத் தொழில்துறை வழித்தடத்தின் கீழ் நன்கு இணைக்கப்பட்ட முனையாக துர்காபூர் அடையாளம் காணப்பட்டுள்ளது.

> வாரணாசி – சிலிகுரி இடையே அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும்.

4. அசாம்

> புத்த மத சுற்றுலா மேம்பாட்டுக்கான ஒரு திட்டம்.

> அகர் மரங்களின் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும்.

> தேஜ்பூரில் மனநல நிறுவனம் நிறுவப்படும்.

> பூர்வோதாய திட்டத்தின் கீழ் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

5. புதுச்சேரி

புதுச்சேரிக்கு எனப் பிரத்யேக அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், பொதுவான திட்டத்தின் கீழ், புதுச்சேரி பலனடையும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தாராபுரம்: பிரசாரத்தில் தாக்கப்பட்டாரா அமைச்சர் சம்பத் குமார்? உள்ளுர் மக்கள் சொல்வது என்ன?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற‌த் தொகுதிக்குக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம்...

மின்வாரிய விவகாரம்: "தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதல்வருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?" – டிடிவி தினகரன்

மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்கும்...

மகாராஷ்டிரா: விவசாய மின் கட்டணம் ரத்து; மாநிலத்தின் 75% பகுதியை 'வறட்சி பகுதி'யாக அறிவித்த அரசு

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பருவ மழை பெய்யவில்லை. சோலாப்பூர்...

தாராபுரம்: "30 நிமிடங்களில் 32 முறை திமுக என்று பேசியிருக்கிறார் முதல்வர்" – உதயநிதி காட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற ( தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர்...