10
August, 2026

A News 365Times Venture

10
Monday
August, 2026

A News 365Times Venture

“அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ், என்னை ஜெய்பீம் சொல்லச் சொல்கிறது '' -பிரதமர் மோடி

Date:

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது.

இந்த பட்ஜெட் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று பெரும் பேசுபொருளாகியிருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பட்ஜெட் மீது கேள்விகள் எழுப்பி பாஜக குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூடிய நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது” என்று பேசியதற்குக் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்திருந்தன.

மோடி

இந்நிலையில், இன்றைய (பிப் 6) நாடாளுமன்றக் கூட்டத்தில் அம்பேத்கர் குறித்துப் பேசியிருக்கும் பிரதமர் மோடி, “மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது ‘பா.ஜ.க’தான். புதிய நாடாளுமன்றத்தின் முதல் முடிவாக இரு அவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீட்டை ‘பா.ஜ.க’ உறுதி செய்தது. அம்பேத்கரின் நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டது காங்கிரஸ் கட்சிதான். அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ வழங்காமல் மறுத்தது காங்கிரஸ். அதற்கு அவர் தகுதி என்றுகூட கருதியது. அவரை தேர்தலில் 2 முறை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் செய்தது. ஆனால், இப்போது என்னை ‘ஜெய்பீம்’ சொல்லச் சொல்கிறது.

பிறரை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் வேலைத்திட்டம். இதனால்தான் அவர்களது கூட்டணியினர் கூட காங்கிரஸை விட்டு விலகிச் செல்கின்றனர்” என்று பேசியிருக்கிறார்.

மோடி

மேலும், காங்கிரஸைக் கடுமையாகச் சாடி பேசியிருக்கும் மோடி, “குடும்ப நலனே முக்கியம் என்பது காங்கிரஸ் கட்சியின் மாடல். நாட்டின் நலன் முக்கியம் என்பதே எங்கள் ‘பா.ஜ.க’ வின் மாடல். எங்கள் மாடல் மீதான நம்பிக்கையிலும், நாட்டின் வளர்ச்சி மீதான நம்பிக்கையிலும்தான் மக்கள் எங்களை மூன்றாவது முறையாகத் தேர்தெடுத்துள்ளனர்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்!

ஈரான் விஷயத்திலும் சரி... காசா விஷயத்திலும் சரி... அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு...

பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு' – தவெக அரசு அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து...

தமிழ்த்தாய் வாழ்த்து: “பாஜக என்றாலே இந்த அரசு பயப்படுகிறது" – முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய...

Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி?

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள்...