1
February, 2026

A News 365Times Venture

1
Sunday
February, 2026

A News 365Times Venture

புதுச்சேரி: `பாஜகவுடன் கூட்டணி தொடருமா ?' – செய்தியாளர்கள் கேள்விக்கு ரங்கசாமி ரியாக்‌ஷன்!

Date:

புதுச்சேரி அரசு சார்பில் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்திற்கு, முதல்வர் ரங்கசாமி இன்று மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டிருக்கிறது. அதேபோல கொரோனாவுக்காக முகக்கவசம் அணிய வேண்டிய தேவை இப்போது இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் தயார் நிலையில் இருக்கின்றன.

முதலமைச்சர் ரங்கசாமி

மருந்துகள் போதிய அளவில் இருக்கின்றன. கொரோனா விவகாரத்தில் மத்திய அரசின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுகின்றன” என்றார்.

தொடர்ந்து, `கொரோனா தொற்று மற்றும் வெய்யிலின் தாக்கம் அதிகரிப்பால் பள்ளி திறப்பை தள்ளிப் போட வேண்டும் என்று எழும் கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இப்போதுதானே பள்ளிகளை திறந்திருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து, `2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நீடிக்குமா அல்லது அணி மாறுமா ?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல், மௌனமாக கடந்து சென்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ரூ.6 லட்சம் கோடி ஊழல்; விசாரணைக்கு உத்தரவிட தயாரா?' – திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

``திமுக மீதான ஊழல் புகார்கள் கற்பனையா? ரூ.6 லட்சம் கோடி ஊழல்...

கொல்கத்தா: "ஆட்டிறைச்சிக்குப் பதில் மாட்டிறைச்சி" – யூடியூபர் புகார்; சர்வர் கைது; பின்னணி என்ன?

பிரபல யூடியூப்பரும், பெங்காலி நடிகருமான சாயக் சக்ரவர்த்தி தனது நண்பர்கள் சிலருடன்...

கருப்பை வாய் தடுப்பூசி: தமிழக அரசின் சலுகை என்ன? யாரெல்லாம் பயன்படுத்தலாம்? – மருத்துவர் விளக்கம்!

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய்...

தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! – அவரின் 6 சாதனைகள் இதோ!

இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்தப் பட்ஜெட்டை...