24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

kirana hills: கிரானா மலை மீது இந்தியா தாக்குதல் நடத்தியதா? – இந்த மலை ஏன் பாகிஸ்தானுக்கு முக்கியம்?

Date:

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவியது. இதற்கிடையில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இருநாடுகளும் மோதல்போக்கை கைவிட்டன. ஆனால் பாகிஸ்தான் அரசு மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது.

இந்த நிலையில்தான் நேற்று முப்படைகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப்பேசினர். அப்போது செய்தியாளர்கள் பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் இருக்கும் பகுதியாக கருதப்படும் கிரானா மலையின் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்தி உண்மையா? எனக் கேள்வி எழுப்பினர்.

modi

கிரானா மலை:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சர்கோடா மாவட்டத்தில் உள்ளது கிரானா மலை. இந்த மலையின் குகைகளில்தான் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. இந்த மலைகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வைரலானது.

கிரானா மலை பாகிஸ்தானுக்கு ஏன் முக்கியம்?

கிரானா மலை பகுதியின் ஆன்லைன் வரைபடத்தைப் பார்த்தால், மலைகளின் பழுப்பு மற்றும் பச்சை நிறத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதைக் காணலாம். அந்த மலையின் குகைகளில்தான் அணு ஆயுதங்கள் பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், ‘கிரானா மலை நிலத்தடி அணுசக்தி உள்கட்டமைப்புக்கு பெயர் பெற்றப் பகுதி. மிகவும் வலுவூட்டப்பட்ட இராணுவ மண்டலம்’ என ஓய்வு பெற்ற கர்னல் விநாயக் பட், நவம்பர் 2017-ல் தி பிரிண்ட் செய்திக்கு எழுதியிருக்கிறார்.

மார்ஷல் ஏ.கே. பாரதி
மார்ஷல் ஏ.கே. பாரதி

கிட்டத்தட்ட 68 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கிய 39 கி.மீ சுற்றளவால் சூழப்பட்ட, கிரானா மலை பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, பாகிஸ்தானின் முக்கியமான 11 இராணுவ தளங்கள் தாக்கப்பட்டது. அதில் முக்கியமானது ரஃபிகி, முரித், நூர் கான், ரஹிம் யார் கான், சுக்கூர், சுனியன், பஸ்ரூர், சியால்கோட் ஆகிய விமானத் தளங்கள் குறிப்பிடதக்கவை.

அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை இந்தியா முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றினாலும், பாகிஸ்தானிடம் அத்தகைய எந்தவொரு கட்டுப்பாட்டுக் கொள்கையும் இல்லை.

இராணுவத்தின் பதில்:

எனவே, கிரானா மலைக்கு அருகில் இருக்கும் நூர் கான், சர்கோதா விமான தளங்களின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை செயல்படுத்தும் முக்கிய தளங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில்தான் கிரானா மலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? என்றக் கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, “கிரானா மலைகளில் சில அணு ஆயுத நிறுவல்கள் உள்ளன என்று எங்களிடம் கூறியதற்கு நன்றி. கிரானா மலையில் என்ன இருக்கிறது என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் கிரனா மலைகளைத் தாக்கவில்லை.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தேர்தல் ஆணையம்: “இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" – முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி...

“ஐ.நா சபை பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" – அர்ஜெண்டினா அதிபர் கடும் விமர்சனம்!

ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி,...

`குடியுரிமைச் சட்டத்தின் பின்வாசல் வழி… தேர்தல் ஆணையத்தின் சரிவு.!' | எம்.ஜி.தேவசகாயம் EXCLUSIVE

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட...

"சிறு பிள்ளைக்குத் தெரியும் அரசியல்கூட த.வெ.க-வினருக்குத் தெரியவில்லை!" – இரா.முத்தரசன் வருத்தம்

'ஆட்சிக்கு ஆதரவு, அதேசமயம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் போட்டி' என்ற கம்யூனிஸ்ட்...