28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

”திமுக ஆட்சி மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது”-சீமான்

Date:

தஞ்சாவூரில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பெ.மணியரசன், சீமான், கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக சீமான் பேசியதாவது, “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என கருணாநிதி முழங்கினார். ஆனால், தற்போது மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என திமுக மாறிவிட்டது. மக்கள் ஆட்சியைத் தான், தன்னுடைய மக்கள் ஆட்சியாக மாற்றவிட்டனர் திமுகவினர்.

சீமான்

மாநில சுயாட்சி என பேசிக்கொண்டே மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் பறிக்கொடுத்துவிட்டனர். இன்று மாநில சுயாட்சி நாயகன் என பாராட்டு விழா நடத்துகின்றனர். தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, தமிழில் அரசாணை என கூறுகிறது. இத்தனை ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். எதற்கெடுத்தாலும் திராவிடர்கள் நாங்கள்தான் காரணம் என்கிறார்கள். நமது வாக்குகளை வாங்கிக்கொண்டு, வலிமை பெற்று அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு, இந்த இன மக்களின் உரிமைகளை பறிக்கொடுத்தவர்கள் இந்த ஆட்சியாளர்கள்.

பிரதமர் மோடி தமிழ் மொழியை பெருமையாகப் பேசுகிறார். உலக நாடுகளில் தமிழை கற்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தமிழ் இன்று இவர்களின் காலடியில் குறுகிக் கிடக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இல்லாத அதிகாரம், ஒரு நியமன உறுப்பினரான ஆளுநருக்கு எப்படி வந்தது. இது மக்கள் கோட்பாடுகளுக்கு எதிரானது. இது குறித்துப் பேசத் துப்பில்லை.

தமிழ்த்தேசிய பேரியக்கம் நடத்திய கூட்டரசுக் கோட்பாடு மாநாடு

நாம் தமிழர் கட்சியை பாஜகவின் பி டீம் என கூறியது திமுகதான். ஏனென்றால் பாஜக வின் ஏ டீம் திமுக தான். நீட் தேர்வு, ஜிஎஸ்டியைக் கொண்டு வந்தது காங்கிரஸ். கூட இருந்து கும்மி போட்டது திமுக தான். சமூக நீதி, மாநில சுயாட்சி, மாநில உரிமை எல்லாம் வெற்று வார்த்தைகள். மாநில சுயாட்சி எனக் கூறி எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்கள் திமுகவினர். கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தது. அதை மத்திய அரசு எடுத்தபோது திமுக அமைதியாக இருந்துவிட்டது.

காஷ்மீரில் ராணுவ முகாம் இருந்த பகுதியில் ராணுவ வீரர்களை கொன்றது எப்படி, பின்னர் ஆதார் கார்டு எதற்கு, என்ஐஏ அமைப்பு எதற்கு. எல்லையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். பஹல்காமில் 200 கி.மீ. தூரம் எப்படி உள்ளே வந்து தீவிரவாதிகள் சுட்டனர். வந்தவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டிருந்தால் அது பெருமை கொள்ளக்கூடிய விஷயம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`செயல்பாடு அப்படி.!' அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சீட் இல்லை – பின்னணியில் மூன்று காரணங்கள்!

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட...

வேடசந்தூர்; செ., பாலாஜி ஆதரவாளருக்கு டிக் அடித்த திமுக; சிட்டிங் எம்எல்ஏ ஓரங்கட்டப்பட்ட பின்னணி!

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில்...

"இதற்குப் பெயர்தான் சீட் பங்கீடா?" – கடிந்துக்கொண்ட பி.எல்.சந்தோஷ் ; கப்சிப் நயினார்

அ.தி.மு.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி...

'மாற்றுக் கட்சி சீனியர்கள்..' ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக விஜய் டிக் அடித்திருக்கும் அந்த இருவர்!

திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 164 வேட்பாளர்கள் திமுக சார்பில்...