20
April, 2026

A News 365Times Venture

20
Monday
April, 2026

A News 365Times Venture

காட்பாடி: புதிய சாலையைச் சேதப்படுத்திய கோயில் விழாக்குழு; கொதிக்கும் மக்கள்; பின்னணி என்ன?

Date:

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கழிஞ்சூர் பகுதியில், கோயில் திருவிழாவையொட்டி மே 2-ம் தேதி மாடு விடும் விழா நடைபெறவிருக்கிறது.

இந்த ஒருநாள் விழாவுக்காக, சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பிரதான தார்ச்சாலையின் இருபுறமும் நீண்டதூரத்துக்குக் குழிகளைத் தோண்டி தடுப்பு அரண்களை அமைத்து வருகிறார்கள் விழாக் குழுவினர்.

காளைகள் ஓடுபாதைக்காக இந்த பிரதான தார்ச்சாலையைத் தயார்ப்படுத்தி வருவது, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலையின் இருபுறங்களையும் ஒட்டியபடி வீடுகளும் அமைந்திருக்கின்றன.

சேதப்படுத்தப்பட்ட புதிய தார்ச்சாலை

சாலையோரம் மண்பாதையும் கிடையாது. இதன் காரணமாகத்தான் சமீபத்தில் போடப்பட்ட தார்ச்சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து இருபுறமும் கடப்பாரையால் குழிகளைத் தோண்டி சேதப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த விழாவை ஊருக்கு வெளியே பொதுவெளியில் நடத்தியிருக்கலாம். யாருக்கும் இடையூறு ஏற்பட்டிருக்காது.

தார்ச்சாலையும் சேதப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இப்போதே கம்புகள் நடப்பட்டுத் தடுப்புகள் கட்டப்பட்டுவிட்டதால் சாலையைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சுற்றிக்கொண்டு செல்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தார்ச்சாலையைச் சேதப்படுத்திய விழாக்குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஜோலார்பேட்டையில் ஜொலிக்கும் தி.மு.க வேட்பாளர் – களத்தில் முந்தும் கவிதா தண்டபாணி

“தி.மு.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சியும், தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டங்களுமே தி.மு.க-வின் திராவிட...

TOUSKA: எச்சரிக்கையை புறக்கணித்த ஈரான்; விளைவு, கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா – சம்பவத்தின் பின்னணி?

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில்,...

"கோவை தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்"- தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்; பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவையில் பல்வேறு...