10
August, 2026

A News 365Times Venture

10
Monday
August, 2026

A News 365Times Venture

Aadhav Arjuna : 'விஜய்யுடன் இணைந்த ஆதவ் அர்ஜூனா!' – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Date:

வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனா விஜய்யின் தவெக-வுடன் இணைந்து பயணிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியிருக்கிறது.

ஆதவ் அர்ஜுனா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சமயத்தில் ஆதவ் பேசிய கருத்துகள் பலவும் பேசுபொருளாகியிருந்தது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, தலீத் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என பல கருத்துகளையும் பேசியிருந்தார். எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிலும் ‘2026 இல் பிறப்பின் அடிப்படையில் ஒரு முதல்வர் வரக் கூடாது.’ என வாரிசு அரசியலுக்கு எதிராக பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விசிக-விலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இடைநீக்க அறிவிப்பு வெளியான பிறகு, தாமாகவே முன்வந்து முழுமையாக கட்சியிலிருந்து வெளியேறிக் கொள்வதாகவும் ஆதவ் அர்ஜூனா அறிவித்திருந்தார். கட்சியிலிருந்து வெளியேறுவதாக சொன்ன அந்த அறிக்கையிலேயே தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்பதையும் அறிவித்திருந்தார்.

ஆதவ் அர்ஜூனா

இந்நிலையில்தான், கடந்த சில நாள்களாக ஆதவ் அர்ஜூனா விஜய்யின் தவெக-வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. விஜய்யும் ஆதவ் அர்ஜூனாவும் பட்டினப்பாக்கத்திலுள்ள விஜய்யின் அலுவலகத்தில் சந்தித்து பேசியதாகவும் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து இன்று ஆதவ் அர்ஜூனா விஜய்யின் பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். இந்தச் சூழலில்தான் இப்போது ஆதவ் அர்ஜூனா தவெக-வில் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி,

ஆதவ் – விஜய்

தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனாவை விஜய்யே அறிவித்து அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

TVK

மேலும், CTR நிர்மல் குமார் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப்பொதுச்செயலாளராகவும் அறிவித்திருக்கிறார்.

‘மேற்கண்ட பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கிணங்க, கழகப் பொதுச்செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி கழகப் பணிகளை மேற்கொள்வார்கள்.

TVK

கழகத் தோழர்களும், அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கானக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் திரு. ஜான் ஆரோக்கியசாமி அவர்களுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என விஜய் கூறியிருக்கிறார்.

19 பேருக்கு புதிய பொறுப்புகளை வழங்கி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஜய்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பிகில், கோட் பட தயாரிப்பாளருக்கு புதிய அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' – விவரம் என்ன?

முதல்வர் விஜய்யை வைத்து பிகில், கோட் போன்ற படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ்...

வாழ்நாள் சேமிப்பு ரூ.60 லட்சம்; மொத்தமாக ராணுவத்துக்கு உயில் எழுதி நெகிழும் மதுரை முதியவர்!

மதுரை ஹார்விபட்டி பகுதியை சேர்ந்தவர், சுப்பையா. 82 வயதான இவர், மதுரா...

'எங்களுக்காக ஒரு பைசா செலவளித்திருப்பாரா?' – எடப்பாடிக்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், திடீரென அவையிலிருந்து...

தேசியக் கொடிக்கு பதிலாக காவிக்கொடி கொடுத்த பாஜக அமைச்சர்; கடுப்பான அமித் ஷா! – நடந்தது என்ன ?

இந்தியக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது, புதுச்சேரி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது....