14
March, 2025

A News 365Times Venture

14
Friday
March, 2025

A News 365Times Venture

கழுகார்: `தவெக: மோதல்கள்… பேரங்கள்… குழப்படிகள் டு பசைப்பழக்கம்; புலம்பலில் குக்கர் விரும்பிகள்’

Date:

“மான்செஸ்டர் மாவட்டத்தில், இலைக் கட்சி மாஜி செய்த திருவிளையாடலால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதனால், மாவட்டக் கழகத்தில் தனக்கு இருந்த பிடியைக் பெரிய அளவில் இழந்துவருகிறாராம் அந்த மாஜி. அவரது வார்த்தைக்கு, தற்போது மாவட்டத்தில் மதிப்பு குறைந்திருக்கிறதாம். அவருடன் மிக நெருக்கமாக இருந்த ‘வில்’ பிரமுகரும், நிலவு பிரமுகரும்கூட அவரைக் கண்டுகொள்வதே இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலை நினைத்து கடும் மன உளைச்சலில் இருக்கும் அந்த மாஜி, சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ‘நாம ஆளுங்கட்சியா இருந்தப்ப சம்பாதிச்சு அனுபவிச்ச பலரும் இப்ப அமைதியா இருக்காங்க. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒண்ணுமே பண்ணாம எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகிடலாம்னு கனவு காணாதீங்க…’ என்று அந்த இருவரையும் மறைமுகமாகக் குறிப்பிட்டுத் தாக்கியிருக்கிறார். ஆனாலும் அவரின் பேச்சை அவர்கள் சட்டை செய்யவே இல்லையாம்!

வெயில் மாவட்டத்திலுள்ள மாநகராட்சியில் கிடைக்கும் இனிப்புகளை, கவுன்சிலர்கள் கண்ணில் காட்டாமல் மேயர் தரப்பும், லோக்கல் சட்டமன்றப் புள்ளியும் ருசித்துவிடுகிறார்களாம். இதனால், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில், கடன் சுமையால் தத்தளித்த ஓர் ஆளுங்கட்சி கவுன்சிலர், தனது இக்கட்டான சூழல் குறித்து எடுத்துச் சொல்லி, ‘இனிப்புகளைக் கொஞ்சம் கிள்ளியாவது கொடுங்களேன்…’ என்று இருவரிடமும் கதறியிருக்கிறார். ஆனாலும், மேயர் தரப்பும், சட்டமன்றப் புள்ளித் தரப்பும் மனமிரங்கவே இல்லையாம். கடன்சுமை தாளாமல், அந்த கவுன்சிலர் ஊரைவிட்டு ஓட்டம் பிடிக்க, விவகாரம் ஆட்சி மேலிடத்தை எட்டியிருக்கிறது. வழக்கு பதிவுசெய்யாமல் அன்-அஃபீஷியலாக அவரைத் தேட, காவல்துறைக்கும் உத்தரவிட்டிருக்கிறதாம் மேலிடம். இதற்கிடையே, அவர் கண்டுபிடிக்கப்பட்டால், தங்களின் மொத்த இனிப்பு விளையாட்டும் வெளியே வந்துவிடுமே எனப் பங்குபோட்டு ருசித்த இருவரும் பயங்கர பீதியில் இருக்கிறார்களாம்!

விவசாய மாவட்டத்திலுள்ள மாநகராட்சியில், மாநகராட்சிக் கடைகள் வாடகைக்கு விடப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சைப் புகார் வெடித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், அங்கு ஆணையராகப் பணியாற்றிய முருகக் கடவுள் பெயர்கொண்ட அதிகாரியிடம், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்துவருகிறது. ஆனால், மாநகராட்சியிலுள்ள தற்போதைய ஆணையர் தரப்பு, விசாரணைக்கு ஒத்துழைப்பே கொடுப்பது இல்லையாம். இதனால், வழக்கை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கிறதாம் லஞ்ச ஒழிப்புத்துறை. இதன் பின்னணியில், முருகக் கடவுள் பெயர்கொண்ட அதிகாரி, தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, துறை மேலிடத்திலுள்ள மற்றொரு முருக நட்சத்திர அதிகாரியைச் சரிசெய்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். அதன்படி, இந்த இரு முருக அதிகாரிகளும் சேர்ந்து, ‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆதாரங்களை வழங்கக் கூடாது’ என்று தற்போதைய ஆணையரை மிரட்டிப் படியவைத்திருக்கிறார்களாம்!

“2021 சட்டமன்றத் தேர்தலில், சீனியர்கள் எவ்வளவோ சொல்லியும், ‘தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என்று கோவில் தொகுதியில் நின்றார் இனிஷியல் தலைவர். சீனியர்களின் கணிப்புப்படி, அவர் தோல்வியடைந்ததோடு, கட்சியும் கடகடவெனக் கரைந்துகொண்டுவருகிறது. இதனால், “2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும்” எனச் சபதம் ஏற்றிருக்கிறாராம் அவர். அதன்படி, அவார்டு மாவட்டத்திலுள்ள காரச்சேவுக்குப் புகழ்பெற்ற தொகுதியைக் குறிவைத்திருக்கிறாராம். அவரின் கணிப்பின்படியே, அங்கு ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் கொஞ்சம் வீக்காகத்தான் இருக்கின்றனவாம். இதனால் குஷியான அவருடைய கட்சி நிர்வாகிகள், காரச்சேவு தொகுதியில் இந்த முறை குக்கரை விசிலடிக்கவைத்துவிட உற்சாகமாகிறார்களாம். இவர்களின் வேகம் ஒருபுறமிருக்க, அந்தத் தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கக்கூடப் பசையை இறக்கவில்லையாம் இனிஷியல் தலைவர். ‘தொகுதியை மாற்றியும் தலைவர் பசைப் பழக்கத்தை மாற்றவில்லையே…’ என்று புலம்புகிறார்கள் குக்கர் விரும்பிகள்!

“பிப்ரவரி 2-ம் தேதி, த.வெ.க-வின் முதலாம் ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தடதடக்கின்றனவாம்.  விழாவையொட்டி, த.வெ.க கொள்கைத் தலைவர்களின் மார்பளவு சிலையை பனையூர் அலுவலகத்தில் திறந்துவைக்கிறாராம் விஜய். கட்சியின் முதலாம் ஆண்டுக்குள் அனைத்து பதவிகளுக்கும் நியமனத்தை முடிக்க திட்டமிட்டதாம் தலைமை. அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதமே மா.செ-க்கள் தேர்வை நடத்தத் தலைமை உத்தரவிட்டது. ஆனால், ஜனவரி மாதத்தில்தான் மா.செ நியமனமே தொடங்கியிருக்கிறது. அதிலும்கூட வெறும் 38 மா.செ-க்கள் மட்டும்தான் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மீதமுள்ள பதவிகளை முதலாம் ஆண்டு விழாவுக்குள் நிரப்பும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த அளவுக்குத் தாமதமாவதற்கு என்ன காரணம் எனக் கேட்டால், `மா.செ பதவிகளைப் பெற, கட்சிக்குள் கடும் மோதல்கள் நடக்கின்றன. அதிகாரத்தை ஒட்டியிருக்கும் சிலர், நாற்காலிக்கான பேரங்களிலும் ஈடுபடுகிறார்கள். இந்தக் குழப்படிகளால், நியமனம் கண்டிப்பாக தாமதமாகும்’ என்கிறார்கள் விவரப்புள்ளிகள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TN Budget 2025: 'சொன்னதைச் செய்வோம் என்பது காற்றில் போச்சு' – பட்ஜெட் குறித்து தலைமைச் செயலக சங்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம்...

'Senthil Balaji-க்கு, இனி ஒவ்வொரு நிமிடமும் ஷாக்தான்' – நெருக்கும் ED | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு...

Russia : ட்ரம்ப், மோடிக்கு நன்றி சொன்ன புதின்; உக்ரைன் – ரஷ்யா போர்நிறுத்தம் சாத்தியப்படுமா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனில் 30 நாள்கள் போர் நிறுத்தம் அறிவிப்பதற்கான...