23
June, 2026

A News 365Times Venture

23
Tuesday
June, 2026

A News 365Times Venture

திருப்பத்தூர் ஏரியின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்; தூய்மைப்படுத்தி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

Date:

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ளது பெரிய ஏரி. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட இந்த ஏரி, மக்களின் மீன் பிடி தொழிலுக்கும் வேளாண் பாசன வசதிக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

ஆனால், கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக, ஏரியின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்திலும், சாலையின் ஓரங்களிலும் குப்பைகள், நெகிழிப் பைகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு, ஏரி தூய்மையற்ற நிலையில் சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த ஏரியையொட்டி பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் அவ்வழியே கடந்து செல்லும் மக்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகிறது. இந்தக் குப்பைகள் எப்படி இங்கே வருகிறது, யார்க் குப்பையைப் போடுகிறார்கள் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் சென்று விசாரித்தபோது, “சமூகப் பொறுப்பற்ற சிலர் இரவு நேரங்களில் வீட்டில் உள்ள குப்பைகளை மூட்டையில் கட்டிக்கொண்டு வந்து இங்கு வீசிவிட்டுச் செல்கின்றனர். அதேபோல இறைச்சிக் கடைகளில் உள்ள பிராய்லர் கழிவுகளை ஏரிக்கரையிலேயே போட்டுவிடுகின்றனர். இதனால் எங்களுக்குத்தான் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்றனர். 

இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் கடந்த நவம்பர் மாதம், `குப்பைக் கிடங்காக மாறும் திருப்பத்தூர் ஏரி; நோய் பரவும் அபாயம்… நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?‘ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

விகடன் செய்தி எதிரொலியாக இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்று, ஏரியின் அருகே உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தியுள்ளார்கள். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசாணை வெளியிட்ட தமிழக அரசு – எப்போது தொடங்குகிறது?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும்...

கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கிய அதிருப்தி கோஷ்டி; உச்சகட்ட சிக்கலில் மம்தா!

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு,...

7 மாத குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை; 4 மணி நேரத்தில் சான்று வழங்கி உதவிய வட்டாட்சியர்!

தூத்துக்குடி மாவட்டம்,  எட்டயபுரம்  தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 மாதக் கைக்குழந்தைக்கு...

“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை!" – முதல்வர் விஜய் கதைக்கு உதயநிதி பதில் கதை

முதல்வர் விஜய் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம்...