14
September, 2026

A News 365Times Venture

14
Monday
September, 2026

A News 365Times Venture

“உங்களுக்கு ஏளனமாக உள்ளதா?'' – நிதிப் பகிர்வு குறித்து நிர்மலா பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

Date:

‘கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கு சென்னையும், கோவையும் தான் அதிக வரி கொடுக்கின்றது. அரியலூர் மற்றும் கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், சென்னையும், கோவையும், ‘நாங்க தான் பணம் கொடுக்குறோம். அதனால, எங்களுக்கு பணம் திருப்பி கொடுங்க. அங்கே செலவு’ என்று சொல்ல வேண்டும்” என்று நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஒரு நிமிடம்…

இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப்‌ பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?

தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பெரியார், அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: "யாரைத் திருப்திப்படுத்த?" – உதயநிதி கேள்வி

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர...

இடைத்தேர்தல் வேட்பாளர்கள்: “ஸ்டாலின் என்னுடன் ஆலோசனை நடத்தினார்" – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக-வின் 22-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை...

"முறிந்த காலுடன் 7000 அடி மலையில் ஏறினேன்" – ஈரானில் சிக்கி 50 மணிநேரம் போராடி தப்பிய அமெரிக்க வீரர்

கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அமெரிக்க விமானங்கள் ஈரான் மீது...

"திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்…" – கனிமொழி சந்தோஷ் கண்டனம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள...