21
November, 2026

A News 365Times Venture

21
Saturday
November, 2026

A News 365Times Venture

’அமைச்சர் விஜய் பார்த்திபனிடம் `உன் வேலையை பார்த்துட்டு போ' என்றேன்; மெய்காப்பாளன் வேலையை.!’ – வைகோ

Date:

கோவை டாடாபாத் பகுதியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ”விஜய் பார்த்திபன் அமைச்சரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. முதல்வரை ஒழுங்குபடுத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அவர் மீது ஒரு துரும்பு கூட விழக்கூடாது என்று அழைத்துச் சென்று கொண்டிருந்தேன்.

நான் கொடுக்கின்ற பாதுகாப்பு 100 பேர் கூட கொடுக்க முடியாது. கலைஞருக்கே பாதுகாப்பு கொடுத்தவன் நான். தேவையில்லாமல் ஒரு ஆள் பின்னே இழுத்தார். உன் வேலையை பார்த்துட்டு போ என்று நான் கூறினேன், நான் யாரையும் திட்டவில்லை. முதலமைச்சர் என்னை அழைத்ததால்தான் நான் அவருடனே சென்றேன். இதை சகித்துக் கொள்ள முடியாத தி.மு.க வட்டாரத்தினர் அதற்கு எதிராக பேசுகிறார்கள்.

வைகோ

கூட்டத்தில் முதலமைச்சரையே தள்ளி விடுவது போல் இரண்டு பேர் வந்தால் மெய்காப்பாளன் வேலையை நான் செய்வேன், முதலமைச்சரை அவர்கள் தள்ளி விடுவார்கள் என்றால் நானே அவர்களை தள்ளிவிட்டு விடுவேன். வாஜ்பாய்க்கும், கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் கூட பாதுகாப்பாளராக இருந்துள்ளேன். செய்தியாளர்கள் எல்லாம் திட்டமிட்டு தி.மு.க-வின் ஏஜெண்டுகளாக வந்துள்ளீர்கள்.

தி.மு.க-வை தலைமேல் தூக்கி வைத்த தலைவர்களில் என்னை விட வேறு யாரும் இல்லை. வடிவேலுவின் வாழ்வை நாசமாகியவர்கள் திமுகவினர். என்னை வடிவேலு என்று கூறுவது பொருத்தமானதுதான். ஏனென்றால் அவரையும் நம்பி அழைத்து வந்து தெருவில் விட்டு விட்டார்கள், அதேபோன்றுதான் என்னையும் செய்து விட்டார்கள்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தீர்ப்பு மிகவும் மனதை காயப்படுத்துகிறது. திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் ஒரு பகுதியில் தர்கா வைத்துள்ளார்கள். இத்தனை ஆண்டு காலம் இல்லாத ஒரு புதுமையாக நீதி அரசர்கள் சமூக ஒற்றுமை குறித்த சிந்தனை சிறிதும் இல்லாமல் நீதி அரசர்கள் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை கொடுத்தது துரதிர்ஷ்டவசமானது. இது மைனாரிட்டி மக்களின் மனதை காயப்படுத்தும் செயல். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு போக வேண்டிய நேரத்தில் போவார்கள். தமிழகத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், பன்னீர்செல்வம், கருணாநிதி ஆட்சிகளை விட த.வெ.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது.

வைகோ, விஜய்
வைகோ, விஜய்

எங்கள் கட்சியை யாராலும் கரைக்க முடியாது. எங்கள் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று கலைஞர் தலைகீழாக நின்றார். ஆனால் அது நடக்கவில்லை அது நடக்கவும் நடக்காது. இன்னும் வீறு கொண்டு எங்கள் கட்சி எழும். மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்கு உரிய விதத்தில் போராடுவோம். தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய முதலீடுகள் ஆந்திராவிற்கெல்லாம் செல்லவில்லை. இதைவிட ஸ்டாலின் ஆட்சியிலும், கருணாநிதி ஆட்சியிலும் அதிகமாக சென்றது. ஒரு சில அரசு அதிகாரிகள் இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிகம் காசு வாங்கி பழக்கப்பட்டு போன அதிகாரிகள் இந்த அரசுக்கு உதவி செய்யாதது மட்டுமல்லாமல், அவப்பெயர் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் உரிமையாளர் அணில் அகர்வால் முதல்வரை பார்க்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் முதல்வர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைவிட விஜயின் நேர்மை பற்றி பேச என்ன இருக்கிறது. தேனி மாவட்டம் சோத்துபாறை அணையை தமிழக வெற்றி கழகத்தினரே திறந்ததில் ஒரு தவறும் கிடையாது. அங்கு தேவை இருந்திருக்கும், அதனால் திறந்து வைத்திருப்பார்கள்” என்றார்.

மல்லை சத்யா குறித்தான கேள்விக்கு, ”முட்டாள்களின் பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பன்னூனைக் கொல்லச் சதி: இந்தியர் நிகில் குப்தாவுக்கு அமெரிக்காவில் 19 ஆண்டுகள் சிறை! – என்ன நடந்தது?

நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கூலிப்படை ஏவிக் கொலை...

ராமநாதபுரம்: சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்… துர்நாற்றத்தில் தவிக்கும் நம்புதாளை மக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தில் ECR சாலையிலிருந்து கிராமத்திற்குச்...

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்… இருதலைக்கொள்ளி நிலையில் முதல்வர் விஜய்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் அனலைக் கிளப்பியிருக்கிறது. கடந்த...

தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை MoU-க்கள், எத்தனை வேலைவாய்ப்புகள்? – தகவல் வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா

வருகிற நவம்பர் 25-ம் தேதி, தமிழ்நாட்டில் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவிருக்கிறது....