20
November, 2026

A News 365Times Venture

20
Friday
November, 2026

A News 365Times Venture

முன்னாள் அமைச்சர் மூர்த்தி: “போதைப்பொருள் கடத்தல்கள்; திசைதிருப்பவே ரெய்டுகள்" – ஸ்டாலின்

Date:

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர் மற்றும் செம்மண் மற்றும் கல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவிற்கு செம்மண் மற்றும் கல் வெட்டி எடுத்ததாக மாவட்ட  குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான  மதுரை  அய்யர் பங்களா, எழில் நகர், ரோஜா வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சட்டவிரோத குவாரி தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பொருட்கள் உள்ளதா என்பது குறித்து முதலாவது நீதித்துறை நடுவர் தகவல் அளிக்கப்பட்டு தற்போது மதுரை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்

முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை

இந்த சோதனை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.

கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் ‘தி.மு.க., தி.மு.க.,’ என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தவெக ஆட்சி கவிழ்ப்பு பற்றி பேசும் முன்னாள் அமைச்சர்கள்; என்ன திட்டத்தில் இருக்கின்றன திமுக, அதிமுக?

'ஆட்சி கவிழ்ப்பு' என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது. சமீபத்தில் முன்னாள்...

`திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்!' – உச்ச நீதிமன்றம் அனுமதி

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்...

Guidance TN விவகாரம்: "தமிழகத்தின் தொழில் முதலீட்டு ரகசியங்கள் கசிந்தனவா?" – டிடிவி தினகரன் கேள்வி

தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வரும்...

'பணிநீக்கமா, ராஜினாமாவா?' Guidance Tamilnadu சர்ச்சையில் டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து தமிழ்நாட்டின் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவிற்குக் கசிந்துள்ளதாகக் குற்றச்சாட்டு...