18
November, 2026

A News 365Times Venture

18
Wednesday
November, 2026

A News 365Times Venture

"தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக தொடர்ந்து முயற்சி" – துரை வைகோ குற்றச்சாட்டு

Date:

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பை மறுத்து, தி.மு.க, அ.தி.முக மறைமுக கூட்டணி வைக்க முயன்றனர். தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தனர். 6 மாதம் கடந்தும் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றனர்.

ரூ. 40 கோடி கொடுக்கக்கூட தி.மு.க தலைமை தயாராக இருக்கிறது. தி.மு.க தலைமை குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது. தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க-வுடன் மறைமுக கூட்டணி வைக்க முயற்சித்தார்கள், அது கைகூடவில்லை. ஆனாலும் தற்பொழுதும் அது தொடர்கிறது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் இந்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழக அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசின் சார்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. தவறு செய்து இருந்தால் தண்டணை கொடுக்க வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு.

உதயநிதி ஸ்டாலின் பெண்களைத் தவறாகப் பேசியதால் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பவில்லை எனச் சொல்லி இருக்கிறார், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை.

கோவையில் இருக்கும் நூலகம் மட்டுமல்ல அனைத்து அரசு அலுவலகங்களிலும் பல கோடி ஊழல் நடைபெற்று உள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. புதிய ஆட்சியில் தற்பொழுது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

துரை வைகோ

இந்தியாவின் எப்ஸ்டீன் விவகாரமாக ஜெம் வீரமணி வழக்கு இருக்கின்றது. 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க, அ.தி.மு.க ஆட்சி காலத்தில் வாச்சாத்தி விவகாரம், பொள்ளாச்சி வழக்கு, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு என பல விடயங்கள் நடந்துள்ளது.

2024, 2025 ல் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஜெம் வீரமணி விவகாரத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. த.வெ.க ஆட்சியில் நேர்மையான முறையில் இந்த விவகாரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, வச்சாத்தி எந்த ஆட்சியில் நடந்தது?” என்றார்.

அப்போது, ‘வாச்சாத்தி சூத்திரதாரி செங்கோட்டையன் இப்போது த.வெ.க-வில் இருக்கின்றாரே?’ என்ற செய்தியாளர் கேள்விக்கு, துரைவைகோ ஆவேசமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ரூ.1,427 கோடி ஆற்று மணல் முறைகேடு: துரைமுருகன் மீது FIR பதிவு; என்னென்ன குற்றச்சாட்டுகள், வழக்குகள்?

ரூ.1,427 கோடி ஆற்று மணல் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்...

திருச்சி: நியாய விலைக் கடை அரிசியில் ரூ.22.20 கோடி முறைகேடு; குடும்பமே கைதான பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொய்கைப்பட்டியில் சண்முகம் (வயது: 57) என்பவருக்குச்...

வாணியம்பாடி: மகளின் கல்விக்காகத் தீக்குளிக்க முயன்ற தாய்; முழுக் கட்டணத்தையும் ஏற்ற திமுக நிர்வாகி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள கதிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் -...