18
November, 2026

A News 365Times Venture

18
Wednesday
November, 2026

A News 365Times Venture

"எனக்கு சொந்தக் கார் இல்லை; முதல் வகுப்பில் பயணிப்பதால்…" – GR சுவாமிநாதனுக்கு சு.வெங்கடேசன் பதில்

Date:

பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள ஊழலின் பாவம் போக வேண்டும் என்றால் ‘மகா பெரியவா’வின் புத்தகத்தை வாங்கி அந்த நூலகத்தில் அடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசியிருந்தார்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை.

நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்

சு.வெங்கடேசனிடம் ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி

சு.வெங்கடேசனின் இந்தப் பதிவிற்கு, “நான் எப்படிப் பேச வேண்டும் என எனக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ரயில் நிலையத்திலிருந்து செல்லும்போது, உயர் ரக காரில், ஆடம்பர உடையில் ஒருவர் இறங்கினார்.

யாரோ என நினைத்தபோது, எம்.பி. வெங்கடேசன் வந்தார். அவர் முதல் வகுப்புக்குச் செல்ல நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார். புத்தக ராயல்டி வருமானத்தால் மட்டுமே இந்த வசதி கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்று பேசலாமா?” என்று பதிலளித்திருந்தார் ஜி.ஆர். சுவாமிநாதன்.

சு.வெங்கடேசன் பதில்

இவரது இந்தப் பேச்சிற்குப் பதில் தரும் விதமாக சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது.

அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது.

நான் இரயில் நிலையம் வந்திறங்கிய கார் கொண்டு விமர்சிக்கப்பட்டிருக்கிறேன்.

இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன.

முதல் வகுப்பில் ரயில் பயணம்…

அது மலிவான தனிநபர் தாக்குதல். அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே என் ரயில் பயணம்.

முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகிவிடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகிவிடாது.

இது போன்ற ஒப்பீட்டை அறிவார்ந்த சமூகம் எடைபோட மறக்காது. எந்த ஒரு மனிதர் மீதான சமூகத்தின் நன்மதிப்பும் அவரது கருத்துகளாலும் செயல்களாலும் உருவாகிறது.

பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில்…

நாங்கள் அணியும் சட்டைக்காகவும், வந்திறங்கும் காருக்காகவும், பயணிக்கும் வகுப்புக்காகவும் இன்னும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறோம்.

இக்கேள்வி “தூய்மை மற்றும் எளிமை” எனும் எங்களின் கோட்பாடு சார்ந்து முன்வைக்கும் போது அதற்கு பொறுப்போடு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியொரு பெருமைமிகு கட்சியால்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

ஆனால், ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது எல்லாவற்றையும் விட முக்கியம்.

பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காகப் பெருமையோடு என்றும் முன்நிற்போம்.

ஏனெனில் இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருச்சி: நியாய விலைக் கடை அரிசியில் ரூ.22.20 கோடி முறைகேடு; குடும்பமே கைதான பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொய்கைப்பட்டியில் சண்முகம் (வயது: 57) என்பவருக்குச்...

வாணியம்பாடி: மகளின் கல்விக்காகத் தீக்குளிக்க முயன்ற தாய்; முழுக் கட்டணத்தையும் ஏற்ற திமுக நிர்வாகி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள கதிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் -...

"என் அம்மா 3 முறை புற்றுநோயை எதிர்கொண்டவர்; ஆனால்…" – சோனியா காந்தி குறித்து ராகுல் எமோஷனல்

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை அனுபவங்​கள், ‘பிலாங்​கிங்: ஏ...